'இந்தியாவை ஆக்கிரமித்து மோடியை சிறையில் அடைப்போம்': பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பேசிய வீடியோ வைரல்..
பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் அந்நாட்டு பயங்கரவாதிகள் காஷ்மீருகுள் ஊடுருவ வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனால் காஷ்மீரில் அவ்வபோது இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் பேசும் அவர், இந்தியாவை ஆக்கிரமித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சங்கிலியால் பிணைத்து இஸ்லாமிய தேசத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறார். மேலும், இந்தியா மீது படையெடுத்த பிறகு பாலஸ்தீனத்தை விடுவிப்பதாக பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி கூறியதை கேட்டு நின்றிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
வைரலான அந்த வீடியோவில் “ இந்தியாவின் ஆட்சியாளர்கள்" அடிமைகளாக ஆக்கப்படுவார்கள் என்றும், பாலஸ்தீனம் கிழக்கு இராணுவத்தால் விடுவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் “ நாம் விரும்பும் அளவுக்கு யாரும் மோடியை சிறைபிடிக்க யாரும் விரும்பவில்லை" என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கூறினார். அவர் சொன்னதைக் கேட்ட கூட்டத்தினர் ராணுவ அதிகாரிக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளில் பயன்படுத்தியது இது முதல் முறை அல்ல. முன்னதாக, பாகிஸ்தானில் இருந்துஇந்தியப் பிரதமரை இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்திய வீடியோக்கள் மற்றும் கிளிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி லக்பீர் சிங் ரோட் பாகிஸ்தானில் உயிரிழப்பு.. யார் இவர்?