50 வயதில் ஜெயலில் நடந்த ஜூலியன் அசாஞ்சே திருமணம் - தன்னை விட 13 வயது இளம் காதலியை மணந்தார்..!
திருமணத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த ஸ்டெல்லா மோரிஸ் கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்ட நாள் காதலி ஸ்டெல்லா மோரிஸ்-ஐ திருமணம் செய்து கொண்டார். ஜூலியன் அசாஞ்சே மற்றும் ஸ்டெல்லா மோரிஸ் திருமணம் லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரண்டு சாட்சியாளர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் என மொத்தம் நான்கு பேர் முன்னிலையில் நடந்தது.
ராணுவ ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க அந்நாடு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியான ஜூலியன் அசாஞ்சே அங்கிருந்து தப்பி லண்டன் வந்தடைந்தார். லண்டலின் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே ஏழு ஆண்டுகள் தங்கி இருந்தார்.
2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த சமயத்தில், அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ்-க்கும் பழக்கம் ஏற்பட்டது. ஸ்டெல்லா மோரிஸ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞ்சராக பணியாற்றி வருகிறார். ஜூலியன் அசாஞ்சே மற்றும் ஸ்டெல்லா மோரிஸ் ஜோடி 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
"நான் இப்போது மிகவும் சந்தோஷமாகவும், வருத்தமாகவும் இருக்கிறேன். நான் ஜூலியனை மனமார காதலிக்கிறேன். அவரும் இங்கு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்," என திருமணத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த ஸ்டெல்லா மோரிஸ் தெரிவித்தார்.
50 வயதான ஜூலியன் அசாஞ்சே 2019 ஆம் ஆண்டு முதல் லண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஆடை வடிவமைப்பாளர் விவைன் வெஸ்ட்வுட் ஸ்டெல்லா மோரிஸ்-க்கு திருமண உடையை வடிவமைத்து கொடுத்தார். இந்த ஆடையில் வெஸ்ட்வுட் கைப்பட எழுதிய தனிப்பட்ட தகவல் இடம்பெற்று இருந்தது.
"என்னை பொருத்தவரை ஜூலியன் அசாஞ்சே ஒரு போராட்ட வீரர்," என வெஸ்ட்வுட் தெரிவித்தார். திருமணத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த ஸ்டெல்லா மோரிஸ் கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் அங்கு கூடி இருந்த ஆதரவாளர்கள் மத்தியில் ஸ்டெல்லா மோரிஸ் உரையாற்றினார். இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோவை விக்கிலீக்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.