இறந்த கணவரின் உடலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவி   ஃப்ரீசரில் வைத்து பாதுகாத்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரை சேர்ந்தவர் ஜீன் சவுரோன் - மாதர்ஸ் (75)  வயதான இவரது கணவர் பால் எட்வர்ட்ஸ்  இறந்த பின்னர் மனைவி  ஜூன் மட்டும்  வீட்டில் தனியாக வசித்து வந்தார் .  அவரது கணவர் முன்னாள் ராணுவ வீரர்  ஆவார் . 

இந்நிலையில் திடீரென கடந்த மாதம் 22ஆம் தேதி ஜூன் வீட்டிற்கு ராணுவ அதிகாரிகள் வந்து  சோதனை மேற்கொண்டனர் .  அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பாக ஜூன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார் எனவும் காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது  இந்நிலையில் ஜூன்  வீட்டை சோதனை செய்த ராணுவ வீரர்களுக்கு மிகுந்த  அதிர்ச்சி  ஒன்று  காத்திருந்தது .  ஜூனின்  வீட்டு  பிரீசரில் சோதனையிட்ட போது,  ஜூனின்  கணவர்  பால் எட்வர்ட்ஸ்ன் சடலம்   பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது,  வீட்டிற்குள் சடலம் இருந்தது கண்டு  ராணுவ அதிகாரிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர் . 

அப்போது ஜூன் உடலுடன் சேர்ந்து ஒரு கடிதமும் இருந்தது அதில் என் மனைவி என்னை கொல்லவில்லை என்று எழுதப்பட்டுள்ளது .  அது பால் எட்வர்ட்ஸ் கையெழுத்து தான் எனவும் கடிதம் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதப்பட்டது என்பதையும் காவல்துறையினர் கைது செய்தனர் . கணவர் மீதான பாசத்தினால் கடந்த பத்தாண்டுகளாக பாலில் உடலை வீட்டிற்குள்ளாகவே வைத்து மனைவி பாதுகாத்து வந்துள்ளாரா அல்லது அவருக்கு மன நோய் எதாவது உள்ளதா வேறு என்னதான் காரணம் என்று  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.