சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டி படைக்கிறது. இன்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 480 மக்கள் உயிரழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 17 லட்சத்து 74 ஆயிரத்து 63  பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 4 லட்சத்து ஆயிரத்து 500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் கூட ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்து வரும் உலக நாடுகள், கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தி வருகிறது. பல நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள் எப்போது தடை உத்தரவு நீக்கப்படும் என்று ஆவலாக காத்திருக்கின்றன. 

இதையும் படிங்க: உடைமாற்ற இடமில்லாமல் தவித்த தமன்னா... ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கிடைத்த பகீர் அனுபவம்...!

ஓரளவுக்கு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நாடுகள், ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறுவது ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதானம், நீண்ட நாட்களாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களின் சூழ்நிலையை எளிதாக்க பல நாடுகள் ஊரடங்கை தளர்த்த திட்டமிடுகின்றன. எங்களுக்கும் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டும் என்பதே விருப்பம். அதே சமயம் முன்கூட்டியே ஊரடங்கு உத்தரவை தளர்த்தினால், மிகப்பெரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது. 

இதையும் படிங்க:  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹன்சிகா... ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... வைரலாகும் போட்டோ...!

இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு சற்று தணிந்திருந்தாலும், 16 ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.