நம்மை அடிமையாக்கி ஆண்டவர்களை ஆளப் போகும் முதல் இந்திய வம்சாவழி ரிஷி சுனக்; யார் இவர்?
பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக 42 வயதாகும் ரிஷி சுனக் பதவியேற்க உள்ளார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மோர்டன்ட் ஆகியோரால் தேர்தலில் போட்டியிட தேவையான 100 எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்ட முடியாத காரணத்தால், பிரிட்டனின் முதல் இந்திய வம்சா வழி பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பது உறுதியாகி இருக்கிறது. இவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த ரிஷி சுனக்?
ரிஷி சுனக், முதன் முறையாக பார்லிமென்டில் பகவத் கீதையின் மீது யார்க்ஷயர் எம்.பி.யாக பதவியேற்றார். இவ்வாறு பதவியேற்றுக் கொண்ட பிரிட்டனின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்.
இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியினர். சுனக்கின் பெற்றோர், மருந்தாளுனர்கள், 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். ரிஷி சுனக் பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை ரிஷி சுனக் மணந்துள்ளார். இவர்களுக்கு கிருஷ்ணா மற்றும் அனோஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
போரிஸ் ஜான்சனின் தலைமையின் கீழ் நிதித்துறை அமைச்சராக இருந்தார். ரிஷி சுனக் டவுனிங் தெருவில் இருக்கும் அவரது இல்லத்தில் தீபாவளியை முன்னிட்டு தீபங்களை இன்று ஏற்றினார்.
பெரும்பாலான இந்திய குடும்பங்களைப் போலவே, ரிஷி சுனக் பெற்றோரும் கல்வியை முக்கிய அம்சமாக பார்த்தனர். ரிஷி சுனக் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரி. மேலும் இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் பணியாற்றியுள்ளார்.
ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வந்து தனது மாமியார் சுதா மூர்த்தி மற்றும் மாமனார் நாராயண மூர்த்தியை சந்தித்து செல்கிறார்.
பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்
2022 ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கான பிரச்சாரத்தின் போது, ரிஷி சுனக் தனது ஆடம்பரமான வீடு, விலையுயர்ந்த உடைகள் மற்றும் காலணிகள் உட்பட பல்வேறு நிலைகளில் விமர்சனங்களை எதிர்கொண்டார். பகவத் கீதை மன அழுத்தத்தில் இருந்து தன்னை மீட்பதாகவும், கடமை உணர்வுடன் இருப்பதற்கு நினைவூட்டுகிறது என்றும் தெரிவித்து இருந்தார்.
ரிஷி சுனக்கின் நிகர சொத்து மதிப்பு 6,540 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இவை தவிர பிரிட்டனில், யார்க்ஷயரில் ஒரு வீடு இருக்கிறது. இதுதவிர அவரது மனைவி அக்ஷதாவுக்கு மத்திய லண்டனில் இருக்கும் கென்சிங்டனில் சொத்து இருக்கிறது.
உடற்தகுதிக்காக, ரிஷி சுனக் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அடுத்த பிரிட்டன் பிரதமர் இவரா ? ரேஸில் முந்தும் இந்திய வம்சாவளி.. யார் இந்த ரிஷி சுனக் ?