சீனாவில் கொரோனாவில் ஏற்படும் அதிகரிப்பு கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. ஏராளமான மக்கள் உயிரிழந்த தங்கள் உறவினர்களை அடக்கம் செய்ய நீண்ட வரிசையில் மயானத்தின் முன் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கொரோனாவில் ஏற்படும் அதிகரிப்பு கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. ஏராளமான மக்கள் உயிரிழந்த தங்கள் உறவினர்களை அடக்கம் செய்ய நீண்ட வரிசையில் மயானத்தின் முன் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கொரோனா பரவலின் 4வது அலை மோசமாகத் தொடங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக சீனா அரசு ஜீரோ கோவிட் கொள்கையைக் கடைபிடித்து வந்ததால் மக்கள் தப்பித்தனர். ஆனால் சீன அரசின் கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் செய்ததையடுத்து, மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

இதையடுத்து, வேகமாக கொரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் பரவயத் தொடங்கியது. தினசரி ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு நடக்கிறது. 

சீனாவில் கோரதாண்டவமாடும் கொரோனா!பெய்ஜிங்கில் பிணக்குவியல்! நிரம்பும் மருத்துவமனைகள்

ஆனால், சீன அரசோ சில உயிரிழப்புகள்தான் நடக்கின்றன, கொரோனா பாதிப்பு பெரிதாக இல்லை எனத் தெரிவித்துள்ளது. சீன அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில்கூட கொரோனாவுக்கு 8 பேர் மட்டுமே பலியானதாகத் தெரிவித்துள்ளது. இதுபோன்று அந்நாட்டில் உள்ள உண்மை நிலவரங்களை மறைத்து சீன அரசு முரண்பாடான தகவல்களை வெளியிடுகிறது.

உண்மையில் சீனாவில் உள்ள சமூக ஊடகங்கள் மற்றும் தனியார் இணையதளங்கள் மூலம் வெளியாகும் செய்திகளில் சீனாவில் கொரோனா பரவல் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

தினசரி ஆயிரக்கணக்கில்மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டவும், அடக்கம் செய்யவும் இடமில்லை. இதனால் மயானத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் உடல்களுடன் ஆம்புலன்ஸ்களும், உடல்களைச் சுமந்த வாகனங்களும் நாட்கணக்கில் காத்திருக்கின்றன.

சீனாவில் கொரோனா வைரஸால் 20 லட்சம் பேர் உயிரிழப்பார்கள்! அதிர்ச்சித் தகவல்

சாங்கிங் நகரில் உள்ள ஒரு மயானத்தில் ஏறக்குறைய 2 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் உடல்களுடன் காத்திருக்கும் காட்சியை சிஎன்என் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

காரில் காத்திருக்கும் ஒருவர் ஏஎப்சி செய்தியாளரிடம் கூறுகையில் “ என்னுடைய உறவினருக்கு கொரோனா பாதித்த சில நாட்களில் உயிரிழந்துவிட்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய வந்தோம். ஆனால் கடுமையான கூட்டம் நிலவுவதால், காத்திருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்

மயானத்தில் பணியாற்றும் ஒருவர் கூறுகையில் “ கொரோனா பரவலுக்குப்பின்எங்களுககு வேலைப்பளு அதிகரித்துவிட்டது. தினசரி கூடுதலாக 10 மணிநேரம் பணியாற்றுகிறோம். உடல்கள் வந்துகொண்டே உள்ளன”எனத் தெரிவித்தார்

Scroll to load tweet…

மயானத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கூறுகையில் “ உடல்கள் அனைத்தையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து மெல்ல அடக்கம் செய்வது என்பது இயலாது. இவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதால், இறந்த அன்றை அடக்கம் செய்ய வேண்டும். மயானத்தில் உடல்களை அடக்கம் செய்ய நாட்கணக்கில் வாகனங்கள் காத்திருக்கின்றன.”எ னத் தெரிவித்தார்

சீனா பேரழிவைச் சந்திக்கும்!தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!5,000 பேர் உயிரிழக்கலாம்

பெய்ஜிங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில்இருந்து வந்துள்ள ஒருவர் கூறுகையில் “ என்னுடைய நண்பர் கொரோனாவில் உயிரிழந்துவிட்டார், அவரை பெய்ஜிங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரின் உடலை வாங்கச் சென்றோம். அங்கு ஏராளமானோரின் உடல்கள் தரையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.” எனத் தெரிவித்தார்

Scroll to load tweet…

இறுதிச்சடங்கிற்கான பொருட்கள் விற்கும்கடையை நடத்தி வரும் ஒருவர் கூறுகையில் “ எனது வாழ்வில் இதுபோன்று பரபரப்பாக பொருட்கள் விற்கும் நாட்களை பார்த்தது இல்லை. என்னால் சப்ளை செய்ய முடியாத அளவுக்கு இறுதிச்சடங்கிற்கான பொருட்கள் காலியாகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பெரும்பாலும் முதியோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதில் 90 சதவீதம் உயிரிழப்பைச் சந்திக்கிறார்கள் என்று சிஎன்என் செய்தி தெரிவித்துள்ளது.