மேற்கு ஆப்பிரிக்காவில் கல்லூரிக்கு வரும் மாணவிகளை கல்லூரிப் பேராசிரியர்கள் பாலியல் உறவுக்கு அழைப்பது மற்றும்  அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவது வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பணிக்கு செல்லும் பெண்கள்,  கல்லூரி மாணவிகள் மீது பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறிவருகிறது. இதற்காக சர்வதேச அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்தும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்த பாடில்லை.  மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வரும் மாணவிகளுக்கு  பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதுடன் அத்துமீறி பாலியல் வல்லுறவு செய்ய முயலும்  அவலங்களும் வீடியோ ஆதாரமாக வெளிவந்துள்ளது.

 

இது தொடர்பாக பிபிசி புலனாய்வு அமைப்பு நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது.  பல ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இதுவரையில் அது நிரூபிக்கப்படாமல் இருந்தது,  இது குறித்து பிபிசி தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர்கள் குழு பல்கலைக்கழகத்தில் நடக்கும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து நிரூபிக்க களமிறங்கினர்.  பல்கலைக்கழக மாணவர்களை போல வேடமணிந்த அவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் தனிமையில் சந்தித்து பல்கலையில் சேர வய்ப்பு கோட்பது போல் நடித்ததுடன் அதை மறைந்திருந்து வீடியோவும் பதிவு செய்தனர்.

கல்லூரி  மாணவிகள் எனக்கருதி அவர்களிடம் பேராசிரியர்கள் சல்லாபமாக பேசியதுடன், அவர்களை உல்லாசத்துக்கு அழைப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது. மற்றுமொரு பேராசிரியர் பட்டப்படிப்புக்கு  கட்டணமாக தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம்   கூறியதும் ஆதாரமாக பதிவாகி உள்ளது.  மாறு வேடமிட்டிருந்த பெண் செய்தியாளர்கள், பேராசிரியர்களின் சிண்டல்களுக்கு நேரடியாக ஆளாகி, திரைமறைவில் இருந்த பேராசிரியர்களின்  காமவெறிபிடித்த முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர். பல்கலைகழகத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான  வன்முறைகளுக்கு இந்த வீடியோ சான்றாக அமைந்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க பல்கலை கழகங்களில் மாணவிகள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.