குரூரமாக்கத்துடிக்கும் கொரோனா வைரஸ்... சீனாவை கண்டமாக்கத்துடிக்கும் ஹண்டா வைரஸ்.. எலியை விரட்டுங்க மக்களே..!

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சீன மக்கள் தற்போழுது சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் வேளையில், அங்கு ஹண்டா எனப்படும் எலி வைரஸ் பரவி வருவதை அந்நாட்டு அதிகாரப்பூர்வமான குலோபல் டைம்ஸ் இணையதளம் உறுது செய்துள்ளது.  

We've gotten rid of the Handa virus ... don't panic

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான சீன மக்கள் தற்போழுது சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் வேளையில், அங்கு ஹண்டா எனப்படும் எலி வைரஸ் பரவி வருவதை அந்நாட்டு அதிகாரப்பூர்வமான குலோபல் டைம்ஸ் இணையதளம் உறுது செய்துள்ளது.  We've gotten rid of the Handa virus ... don't panic

இந்த வைரஸ் குறித்து கூறியுள்ள மருத்துவர்கள், எலியில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு விவசாயிகளே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.ஹண்டா வைரஸ் தாக்குதல் உடலில் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் வறட்டு இருமல், தலைவலி ஏற்படும் பின் சுவாசக் கோளாறு இரத்தப் போக்கு ஏறபட்டும், இதையடுத்து,  உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து மரணம் ஏற்படும் என்று கூறினர். 

We've gotten rid of the Handa virus ... don't panic
ஆனால் இந்த வைரஸ் கடந்த ஆண்டு,  சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் எலியின் மூலம் பரவி சிலியில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் கூறப்பட்டது. 

சீனாவின் யுனான் மாகாணத்திலிருந்து ஷடாங் மாகாணத்திற்குப் பேருந்தில் சென்று கொண்டு இருக்கும்போது, ஒருவர் திடீரென இறந்தார். இவரைச் சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பேருந்தில் பயணித்த 32 பேரையும் மருத்துவர்கள் சோதித்தனர். இந்த வைரஸ் தற்போது பிரான்சிலும் பரவி இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் இருக்கும் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அங்கு இருக்கும், ஓட்டல்கள், பார்கள், கிளப்புகள் மூடப்பட்டன. நியூ ஓர்லியன்ஸ் பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஹண்டா எனும் வைரஸ் எலியைத் தாக்கும். இந்த வைரஸ் மற்ற விலங்குகளைத் தாக்காது. ஆனால் மனிதனை மிக எளிதாகத் தாக்கும் என கூறப்படுகிறது. எலியின் சிறுநீர், எச்சில், மலம் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்குப் பரவும். ஹண் டா வைரஸ் தாக்குதலும் புளூ காய்ச்சலைப் போன்றதே. தொடக்கத்தில் இதன் அறிகுறியாகக் காய்ச்சல், குளிர், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிறு வலி ஆகியவையாக இருக்கும். இந்த வைரஸ் தாக்குதலை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது கடினம். பத்து நாட்களுக்குப் பின்னரே தெரிய வரும். இந்த வைரஸும் முதலில் நுரையீரலைத் தாக்கும். பின்னர் ரத்த நாளங்களுக்குள் செல்லும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவாது.

தற்போது இந்த வைரஸ் தாக்குதலும் சீனாவுக்குத் தலைவலியாக அமைந்துள்ளது. இது மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவாது என்ற நிம்மதி இருந்தாலும், எலியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டைச் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். வீட்டின் சுற்றுப் புறங்களையும் பாதுகாக்க வேண்டும் எனச் சீனா வலியுறுத்தி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios