கொரோனாவை அடையாளம் கண்டு உலகையே காப்பாற்றியது நாங்கதான்: அமெரிக்காவை பார்த்து சிரிக்கும் சைகோ சீனா..!!
தொடர்ந்து பல ஆராய்ச்சி மற்றும் விசாரணைக்குப் பிறகு சீனா மிக விரைவாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை எடுத்தது. உடனே உலக நாடுகளுக்கு இதை எச்சரித்தது. ஜனவரி 23 ஆம் தேதி அவசரமாக வுஹான் நகரம் மூடப்பட்டது.
கொரோனா வைரஸால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா அதிர்ச்சி தரும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா என்ற தோற்று கடந்த ஆண்டுதான் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது என்றும், அதே நேரத்தில் அதை உலகத்திற்கு முதன் முதலில் கண்டுபிடித்து அறிவித்த முதல் நாடு சீனாதான் என்றும், அதிலிருந்து உலகை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த நாடும் சீனாதான் எனவும் அந்நாடு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸை பரப்பியது சீனாதான் எனக் கூறி வரும் நிலையில், சீனா அதற்கு நேரெதிராக கூறியிருப்பது, சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவியுள்ளது. உலக அளவில் 180 க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்நிலையில் வைரஸை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த உலகமும், கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகின்றன. அதேபோல் சீனாவே இந்த வைரஸ் பரவியதற்கு காரணம் என்றும், ஆரம்பத்திலேயே இந்த வைரஸை அந்நாடு எச்சரித்திருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்றும், ஆனால் சீனா திட்டமிட்டே வைரஸ் குறித்த தகவலை மறைத்தது என்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சீனாவை கடுமையான சாடிவருகின்றன.
உலகநாடுகள் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டுக்குள் நுழைய வேண்டுமென ஒட்டுமொத்த உலக நாடுகளும் சீனாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றின. இதனிடையே மற்றொரு புறம் கொரோனா விவகாரத்தால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையேயான வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸிலிருந்து தன்னை மட்டும் தற்காத்துக் கொண்ட சீனா, தனது பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து புதிய கூற்றையும் சீனா முன் வைத்துள்ளது. அது என்னவெனில், கடந்த ஆண்டுதான் இந்த தொற்று உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது, அதை இந்த உலகத்திற்கு முதலில் கண்டுபிடித்து எச்சரித்தது சீனாதான் என தெரிவித்துள்ளது. அதேபோல், சீனாவின் வுஹான் சந்தையில் இருந்துதான் இந்த நோய் பரவியது என்றும், வௌவால்கள் மற்றும் பங்கோலின்களின் மூலம் இந்த வைரஸ் பரவியது என்றும், அதேபோல வுஹானின் பயோ ஆய்வுக் கூடத்திலிருந்து இது கசிந்தது என்றோம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என சீனா மறுத்துள்ளது.
இதுகுறித்து கடந்த வெள்ளிக் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறியதாவது: குரானா வைரஸ் ஒரு புதிய வகை வைரஸ், இது தொடர்பாக பல உண்மைகள் வெளிவந்துள்ளன, இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறும் கருத்துக்கள் அத்தனையும் உண்மைக்குப் புறம்பானவை. அதாவது குவாட் நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டோக்கியோசென்ற பாம்பியோ சீன கம்யூனிஸ்ட் கட்சி வைரஸ் குறித்த தகவல்களை மறைத்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதேபோல் சீனாவால்தான் தொற்றுநோய் மோசமடைந்தது எனவும் கூறியுள்ளார். இது அத்தனையுப் பொய். சீனாவின் ஆய்வுசெய்ய WHO ஒரு குழுவை சீனாவுக்கு அனுப்பியது, ஆகஸ்டில் இரண்டு பேர் கொண்ட WHO குழு சீனாவுக்கு வந்தது, கொரோனா பரவலின் ஆரம்பம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர் என்றார்.
அதேபோல் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரசின் முதல் தொற்று வுஹானில் பதிவானது, சீன விஞ்ஞானிகள் குழு ஜனவரி 19 அன்றே கொரோனா தொற்று நோயை அடையாளம் கண்டது. தொடர்ந்து பல ஆராய்ச்சி மற்றும் விசாரணைக்குப் பிறகு சீனா மிக விரைவாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை எடுத்தது. உடனே உலக நாடுகளுக்கு இதை எச்சரித்தது. ஜனவரி 23 ஆம் தேதி அவசரமாக வுஹான் நகரம் மூடப்பட்டது. அந்நேரத்தில் சீனாவிற்கு வெளியே 9 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது அமெரிக்காவில் ஒருவர் மட்டுமே தொற்றுக்கு ஆளாகி இருந்தார். அப்போது பிப்ரவரி 2 அன்றே சீன குடிமக்கள் உள்ளே நுழையக்கூடாது என அமெரிக்கா தனது எல்லையை மூடியது. அப்போது அமெரிக்காவில் வெறும் 12 பேர் மட்டுமே பதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது அமெரிக்கா தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு 78லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என சீனா விளக்கமளித்துள்ளது.