Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை அடித்து தூக்கிய மலேரியா மாத்திரை..!! அமெரிக்க அதிபர் அதிரடி அறிவிப்பு..!!

மலேரியா சிகிச்சைக்கான மருந்தை கொரோனா வைரசுக்கும்  பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் .  ஜப்பான் நாட்டு தயாரிப்பான   favipiravir என்ற காய்ச்சலுக்கான மருந்து கொரோனா சிகிச்சைக்கு நல்ல பலன் அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.  

we can use malaria tablet for corona virus - american president trump announced
Author
Delhi, First Published Mar 20, 2020, 11:49 AM IST

மலேரியா சிகிச்சைக்காக பயன்படுத்தும் மருந்தை கொரோனா தடுப்புக்காகவும் பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பில்  அவர் இவ்வாறு  கூறியுள்ளார் ,  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் உலகம் முழுக்க பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .  இதுவரையில் இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்படாததால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதுமட்டுமல்லாமல் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது . இதற்கிடையே கொரோனாவுக்கு  மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளிலும் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகிறது . 

we can use malaria tablet for corona virus - american president trump announced

மலேரியா சிகிச்சைக்கான மருந்தை கொரோனா வைரசுக்கும்  பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் .  ஜப்பான் நாட்டு தயாரிப்பான   favipiravir என்ற காய்ச்சலுக்கான மருந்து கொரோனா சிகிச்சைக்கு நல்ல பலன் அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.  வைரஸை  கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்க  உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள்  இரவும் பகலுமாக போராடி வருகின்றனர்,  இந்நிலையில் மலேரியா சிகிச்சைக்கான  மருந்தை கொரோனாவுக்கும் பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பு அறிவித்துள்ளார் . திடீரென செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிரடியாக இதை அறிவித்தார்.  இந்த மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி  அளித்திருப்பதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .  இந்நிலையில் இந்த மருந்தை பயன்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர் . 

we can use malaria tablet for corona virus - american president trump announced

இந்நிலையில் ஜப்பான் பியூஜி பிலிம் நிறுவனத்தின் துணை நிறுவனத்தின் தயாரிப்பான  favipiravir என்ற காய்ச்சலுக்கான மருந்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றி இருப்பதாக சீனா அறிவித்துள்ளது .  இந்த மருந்தால் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 340 பேர் குணம் அடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .  இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க முடியும் என ஜப்பானில் பணியாற்றும் ஆய்வாளர் மருத்துவர் கணேஷ் பாண்டியன் தெரிவித்துள்ளார் .  கொரோனாவுக்கு மற்ற வைரஸ்களை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் favipiravir மருந்து ஆய்வாளர்களுக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது. 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios