தமிழர்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம்….. நெஞ்சம் நெகிழ பொங்கல் வாழ்த்து சொன்ன பிரிட்டன் பிரதமர்….
தமிழர்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம்….. நெஞ்சம் நெகிழ பொங்கல் வாழ்த்து சொன்ன பிரிட்டன் பிரதமர்….
தைப் பொங்கல் திருநாளான இன்று தமிழர்களால் பிரிட்டன் மக்கள் பெருமைப்படுவதாகவும், தமிழர்களுக்கு தனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்
தைத் திருநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் இன்று அதிகாலையிலே எழுந்து புத்தாடை உடுத்தி தமிழர்கள் தைத் தைதிருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையொட்டி தமிழகத்தில் உள்ள குக்கிராமங்களிலும் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தைப் போன்றே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டானர். எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அமெரிக்க நாட்டில் கூட தைத்திருநாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
இதனைடையே உலகம் முழுவதிலும் உள்ள பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பொங்கல் திருநாளையொட்டி தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இன்று தமிழகர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
தெரசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேச துவங்கும் முன் தமிழில் வணக்கம் என்று சொல்கிறார்.
அதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் உலக முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். தமிழர்கள், இங்கிலாந்து வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியுள்ளனர். தமிழர்களால் நாங்கள் பெருமை படுகிறோம். வரும் ஆண்டு அவர்களுக்கு சிறப்பாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.
உலகத் தலைவர்களுள் முக்கியமானவராக கருதப்படும் பிரிட்டன் பிரதமர், தைத் திருநாளையொட்டி வாழ்த்துத் தெரிவித்திருப்பது தமிழர்களுக்கு பெருமை அளிப்பதாக அமைந்துள்ளது..