ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் டிரம்ப் தூங்குவதாகக் கூறப்படும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளன. முன் வரிசையில் அமர்ந்திருந்த டிரம்ப் கண்களை மூடியிருந்த படங்களைப் பகிர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. டிரம்பின் ஆதரவாளர்கள் ஜோ பிடன் தூங்கும் வீடியோக்களைப் பகிர்ந்து எதிர்வினையாற்றியுள்ளனர்.

ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தூங்குவதைக் காட்டும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. இது ஆன்லைனில் விவாதத்தையும் தூண்டியுள்ளது.

இறுதிச் சடங்கு நிகழ்வின்போது, ​அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். நிகழ்வுகள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, டிரம்ப் தூங்கிவிட்டதாக சமூக ஊடக பயனர்கள் படங்களுடன் பதிவிட்டுள்ளனர்.

டிரம்ப் கண்களை மூடியிருப்பதைக் காட்டும் படங்களைப் பதிவிட்டு, விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை 1000 வருஷமா நடக்குது: டொனால்டு டிரம்ப் கருத்து

Scroll to load tweet…

முன்வரிசையில் அமர்ந்து தூங்கிய டிரம்ப்:

"போப்பின் இறுதிச் சடங்கில் டிரம்ப் தூங்குகிறார். எப்போதும் போல இது ஒரு சங்கடம்," என்று ஒரு பயனர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், "போப்பின் இறுதிச் சடங்கில் டிரம்ப் மொபைலில் குறுஞ்செய்தி அனுப்புவது, சிரிப்பது, போன் பேசுவது, தூங்குவது போன்ற புகைப்படங்கள் வந்துள்ளன" என்று குறிப்பிட்டு பல படங்களைப் பகிர்ந்துள்ளார்.

டிரம்ப் மீதான விமர்சனத்துக்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தூங்கி வழிந்த காட்சிகளை வீடியோவாகவும் புகைப்படங்களாவும் பகிர்ந்து வருகின்றனர்.

Scroll to load tweet…

பிரெஞ்சு அகரவரிசையில் இருக்கை அமைப்பு:

போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கு நிகழ்வில் விருந்தினர்களுக்கான இருக்கைகள் பிரெஞ்சு மொழியில் நாடுகளின் பெயரை அகர வரிசைப்படி அமைத்திருந்தனர். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் போன்ற பிற உலகத் தலைவர்கள் டிரம்ப் மற்றும் மெலனியாவிட பின்னால் அமர்ந்திருந்தனர்.

விமர்சனங்கள் வந்தாலும், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இறுதிச் சடங்கின் தருணங்களைப் பகிர்ந்துள்ளார். போப் பிரான்சிஸின் சவப்பெட்டியின் முன் தான் பணிவுடன் நிற்கும் படங்களை வெளியிட்டார். அதே நாளில் டிரம்ப் ஜெலென்ஸ்கியுடன் ஒரு நேரடி சந்திப்பை நடத்தினார். பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் நடந்த கடுமையான விவாதத்துக்குப் பிறகு இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர்.

ஆடம்பர பொருட்கள் மீது கூடுதல் வரி: நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு