ஆடம்பர பொருட்கள் மீது கூடுதல் வரி: நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுள்ள ஆடம்பரப் பொருட்களுக்கு 1% வரி (TCS) விதிக்கப்படும். கைக்கடிகாரங்கள், கைப்பைகள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இந்த வரி பொருந்தும். இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வரி இணக்கத்தை உறுதிப்படுத்தவும் உதவும்.

Tax Collected at Source (TCS)
மத்திய நேரடி வரிகள் வாரியம்
இந்திய அரசாங்கம் இப்போது அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியைக் கடுமையாக்கியுள்ளது. ஏப்ரல் 22 முதல், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுள்ள ஆடம்பரப் பொருட்களுக்கு 1% வரி (TCS) விதிக்கப்படும். கைக்கடிகாரங்கள், கைப்பைகள், கலைப்பொருட்கள், ஹோம் தியேட்டர், படகுகள், பந்தய குதிரைகள் ஆகியவற்றுக்கு இந்த வரி பொருந்தும்.
1% TCS income
1% வருவாய் ரூ.500 கோடி:
அரசாங்க வட்டாரங்களின்படி, 1% வரியிலிருந்து அரசாங்கம் ஆண்டுதோறும் ரூ.140–210 கோடி வரை சம்பாதிக்கக்கூடும். சொகுசு கார் மற்றும் நகை சந்தையைப் பொருத்து இந்த வருவாய் இன்னும் அதிகமாக இருக்கலாம். இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் ரூ.500 கோடியை நெருங்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரி விதிப்பின் நோக்கம் நேரடி வரி வசூலை அதிகரிப்பது அல்ல. மாறாக இது வருமான வரி விதிகளுக்கு இணக்கமாக நடப்பதை உறுதிப்படுத்தும் கருவியாக அமையும். என்று ஒரு அதிகாரி கூறுகிறார்.
Income Tax Department
TCS வரி
ஏப்ரல் 22 தேதியிட்ட அறிவிப்பில், வருமான வரித் துறை ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுள்ள ஆடம்பரப் பொருட்களின் விற்பனையில் TCS வரி விதிக்க புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதில் அளிக்கப்பட்டுள்ள பட்டியலின்படி, கைக்கடிகாரம்; பழங்காலப் பொருட்கள்; ஓவியம், சிற்பம் போன்ற கலைப் படைப்புகள்; நாணயம், முத்திரைத் தாள் போன்ற சேகரிப்புப் பொருட்கள்; படகுகள்; கேனோ; ஹெலிகாப்டர்; சன் கிளாஸ்; ஹேண்ட்பேக், பர்ஸ் போன்ற பை வகைகள்; காலணிகள்; கோல்ஃப் கிட், ஸ்கை-வேர் போன்ற விளையாட்டு உடைகள் மற்றும் உபகரணங்கள், ஹோம் தியேட்டர் அமைப்பு; பந்தய கிளப்புகள், பந்தயக் குதிரை ஆகியவற்றை ரூ.10 லட்சத்துக்கு மேல் விலை கொடுத்து வாங்கும்போது 1% TCS வரி விதிக்கப்படும்.
India’s luxury market
வரி ஏய்ப்பைத் தடுக்க:
இந்த நடவடிக்கை முதன்முதலில் ஜூலை 2024 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும், இதன் கீழ் வரும் பொருட்கள் இப்போது முறைப்படுத்தப்பட்டுள்ளன. அதிக மதிப்புள்ள பொருட்கள் வாங்குவதைக் கண்காணித்து, வரி ஏய்ப்பைத் தடுக்க வரி செலுத்துவோரின் வருமான விவரங்களுடன் அவற்றை இணைப்பதுதான் இதன் நோக்கம்.
தொழில்துறை மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் ஆடம்பர சந்தை 2024ஆம் ஆண்டில் சுமார் ரூ.1.4 லட்சம் கோடி ஆகும். இது வரும் பத்தாண்டுகளில் வேகமாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தையில் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான விலையுள்ள பொருட்களை வாங்குவது குறைந்தபட்சம் 10–15% இருக்கும்.