கடலில் இருந்து வெளிவந்த ஏலியன்கள்.. பூமிக்கு வந்த புதிய ஆபத்து ? வைரல் படத்தால் பரபரப்பு !

ஏலியன் ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

War of the Worlds aliens crawling out of ocean spark panic among beachgoers

ஏலியன் (Alien) இருக்கிறதா? இல்லையா? என்பதை பல தசாப்தங்களாக நாம் தேடி வருகிறோம். நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் ஏலியன் உயிர் அடையாளங்களைத் தேடி நாசா இன்றளவும் தேடி வருகிறது. வேற்றுகிரகவாசிகள் என்றாலே நமக்கு அதீத ஆர்வமும் நம்மை விட்டு போவதில்லை.

War of the Worlds aliens crawling out of ocean spark panic among beachgoers

இந்த நிலையில் ஏலியன் ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான் வோர்ஸ்டர் என்பவர் ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை மட்டுமல்ல பீதியையும் கிளப்பியுள்ளார். ஆனால் அது உண்மையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

இறந்த தாவரங்களின் புகைப்படங்களை கடலில் இருந்து வெளிவரும் வேற்றுகிரகவாசிகள் என்று தவறாகக் கருதினார் என்று நிபுணர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். நியூயார்க் போஸ்ட் மூலம் ஜான் வோர்ஸ்டர் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தென்னாப்பிரிக்க ஃபேஸ்புக் குழுவில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.  சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தனது முக்கிய நோக்கம் என்று வோர்ஸ்டர் கூறினார்.

War of the Worlds aliens crawling out of ocean spark panic among beachgoers

இதுபற்றி கூறிய அவர், நான் இந்த எதிர்வினையால் ஆச்சரியப்பட்டேன். மக்கள் அதை வேடிக்கை பார்ப்பார்கள் என்று நான் நினைத்தேன் என்று கூறினார். இந்த பதிவை பார்த்த பலர், டாம் குரூஸ் உடனான வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸில் இருந்து ஏதோ வேற்றுகிரகவாசிகள் போல் தெரிகிறது என்றும், அது சிலந்திகள் தானே’ என்றும் பதிவிட்டனர்.

இதையும் படிங்க..அதிசயம்.!! நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. வைரலாகும் போட்டோஸ் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios