Asianet News TamilAsianet News Tamil

அதிசயம்.!! நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. வைரலாகும் போட்டோஸ் !

மத்தியப் பிரதேசத்தில்  பிறந்த குழந்தை ஒன்று நான்கு கால்களுடன் பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Girl Baby Born With Four Legs In Madhya Pradesh
Author
First Published Dec 16, 2022, 4:13 PM IST

உலகில் பல விஷயங்கள் இந்த நவீன உலகத்திலும் நம்மை ஆச்சர்யப்பட வைக்க தவறுவதில்லை.

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தில் பெண் ஒருவர் நான்கு கால்களுடன் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா என்ற பெண், கடந்த புதன்கிழமை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

Girl Baby Born With Four Legs In Madhya Pradesh

பிறந்த பெண் குழந்தையின் எடை 2.3 கிலோ.  4 கால்களுடன் பிறந்த குழந்தையை டாக்டர்கள் குழு பரிசோதித்தது.இதுகுறித்து டாக்டர் ஆர்.கே.எஸ்.தாகத் செய்தியர்களிடம் கூறும்போது, குழந்தைக்கு பிறக்கும்போது நான்கு கால்கள் இருந்தது. சில நேரத்தில் கருக்கள் கூடுதல் ஆகின்றன. இதன் காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது என்று விளக்கமளித்தார்.

இதையும் படிங்க..66 குழந்தைகள் மரணத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து காரணமா? இந்தியா வெளியிட்ட பகீர் தகவல் !

தொடர்ந்து பேசிய அவர், இது மருத்துவ அறிவியலின் மொழியில் இஸ்கியோபாகஸ் என்று அழைக்கப்படுகிறது. கரு இரண்டு பகுதிகளாகப் பிரியும் போது, உடல் இரண்டு இடங்களில் உருவாகிறது.இந்தப் பெண் குழந்தையின் இடுப்புக்குக் கீழே இரண்டு கூடுதல் கால்களுடன் வளர்ந்திருக்கிறது, ஆனால் அந்த கால்கள் செயலற்ற நிலையில் உள்ளது.

Girl Baby Born With Four Legs In Madhya Pradesh

தற்போது குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர்கள், உடலில் வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனைக்கு பின் குழந்தை நலமாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் அந்த கால்கள் அகற்றப்படும் என்று கூறினார்.  நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களை சேர்ந்தவர்கள் குழந்தையை பார்த்து செல்கின்றனர்.

இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

Follow Us:
Download App:
  • android
  • ios