66 குழந்தைகள் மரணத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து காரணமா? இந்தியா வெளியிட்ட பகீர் தகவல் !
காம்பியா குழந்தை இறப்புக்கும், இந்திய இருமல் மருந்துகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்கு இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தைக் குழந்தைகள் உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த செய்தி இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவின் மைய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் லிமிடெட் தயாரித்த நான்கு இருமல் மற்றும் சளிக்கான சிரப்களை ஆய்வுசெய்திருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துகள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதிர்ச்சி செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த அக்டோபரில், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 சளி மற்றும் இருமல் மருந்துகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தது. குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்புகளுக்கும், 66 குழந்தைகளின் மரணத்துக்கும் இது காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டது.
இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
இதைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகமும், இந்த மருந்துகள் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை என்றும், இந்தியாவில் விற்கப்படவில்லை என்றும் கூறியிருந்தது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) விசாரணையை தொடங்கியது. டாக்டர் வி ஜி சோமானி, உலக சுகாதார இயக்குனர் டாக்டர்.ரோஜெரியோ காஸ்பருக்கு எழுதிய கடிதத்தில், அக்டோபர் மாதம் உலகளாவிய சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கை துரதிர்ஷ்டவசமாக உலகளாவிய ஊடகங்களால் பெரிதாக்கப்பட்டது.
இது பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியது. இருமல் மருந்து உட்கொள்வதற்கும், இறப்புக்கும் இடையே நேரடியான தொடர்பு எதுவும் இதுவரை நிறுவப்படவில்லை. இறந்த சில குழந்தைகள் சர்ச்சைக்குரிய மருந்தை உட்கொள்ளவில்லை. காம்பியாவில் குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய நான்கு இந்திய தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் மாதிரிகள் அரசாங்க ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது. அந்த சோதனை அறிக்கைகளின்படி, உலக சுகாதார நிறுவனம் இறந்தவர்களின் இறப்புக்கான காரணத்தை சரியாக வழங்கவில்லை என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க..பாவம் சும்மா விடாது.!! முதல்வர் மு.க ஸ்டாலின் சாதனை இதுதான்.!! கொந்தளித்த எஸ்.பி வேலுமணி