இயற்கைப் போராளி கிரேட்டா தன்பெர்கின் உருவ பொம்மையை தூக்கில் தொங்கவிடப்பட்ட அதிர்ச்சி...! 

இயற்கையை காப்போம் என கிரேட்டா தன்பெர்க் ஐ.நா.சபையில் உரையாற்றிய பின் உலகமெங்கும் இருக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவருடைய உருவ பொம்மையை இத்தாலியில் உள்ள ஓர் பாலத்தின் அடியில் கயிற்றில் கட்டி தூக்கில் தொங்குவது போல் கட்டி தொங்க விட்டு உள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.    

ஐ நா சபையில் யாரும் எதிர்பாராத விதமாக, பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்கிறீர்கள் என மிகவும் தைரியமாக ஐ நா சபையில் பேசியவர் இவர். இவரின் பேச்சு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பாலத்தின் கீழ் கிரேட்டா தன்பெர்கின் உருவ பொம்மையை தொங்கவிட்டு அதில் " கிரேட்டா உங்கள் கடவுள்" என எழுதி சென்று உள்ளனர்.

 

இந்த நிகழ்விற்கு ட்விட்டரில் கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளார் ரோம் நகர மேயர் Virginia Raggi. அதில், "இந்த நிகழ்வு ஒரு வெட்கக்கேடானது....கிரேட்டாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ரோம் நகர மக்கள் ஆதரவு உள்ளது என தெரிவித்து உள்ளார். மேலும் பருவ நிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மறக்கவில்லை என்றும் பதிவிட்டு உள்ளார். இந்த சம்பவம் ஓர் அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாக அமைந்து உள்ளது.