கொலம்பிய அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலையில் காயம் அடைந்த அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொலம்பிய அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போகோட்டாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நேரடி காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதில், அவர் தனது தலையை நோக்கி விரலைக் காட்டும்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டடுள்ளது. உரிப் மீது மூன்று முறை சுடப்பட்டதாகவும், இரண்டு முறை தலையில் சுடப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Scroll to load tweet…

சென்ட்ரோ டெமோக்ராட்டிகோ கட்சியின் தலைவர் மிகுவல் உரிபே 

39 வயதான உரிபே தற்போது செனட்டராக உள்ளார். அவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். உரிபே கொலம்பியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான சென்ட்ரோ டெமோக்ராட்டிகோவின் தலைவராக உள்ளார். சென்ட்ரோ டெமோக்ராட்டிகோ கட்சி சார்பில் நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது, ​​திடீரென மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அந்த இடமே பரப்பரப்பானது. காயத்தால் கீழே விழுந்த மிகுவல் உரிபேவை கட்சியினர் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே மிகுவல் உரிபே மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 15 வயது நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

அதிபர் குஸ்டாவோ பெட்ரோ இரங்கல்

தலைநகர் போகோட்டாவின் ஃபோன்டிபோன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு உரிபேவுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போகோட்டா மேயர் கார்லோஸ் காலன் தெரிவித்தார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொலம்பிய அரசு மற்றும் சென்ட்ரோ டெமோக்ராட்டிகோ கட்சி, முன்னாள் அதிபர்கள் மற்றும் பிற பிராந்தியத் தலைவர்கள் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, உரிபேவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். "உங்கள் துயரை எவ்வாறு குறைப்பது என்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.