2024-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் டென்மார்க், வெனிசுலா, மெக்சிகோ, நைஜீரியா, தாய்லாந்து நாட்டு அழகிகள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளனர்.

உலக அழகிப் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. இதில் வெற்றியாளரை தீர்மானிக்கும் சுற்றில் டென்மார்க், வெனிசுலா, மெக்சிகோ, நைஜீரியா, தாய்லாந்து நாட்டு அழகிகள் பங்குபெற்றனர். இதில் இறுதியாக நடைபெற்ற கேள்வி பதில் சுற்றில் வெற்றிபெற்று டென்மார்க் நாட்டை சேர்ந்த விக்டோரியா கேயர் தெல்விக் என்பவர் உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் 2024-ம் ஆண்டுக்கான உலக அழகியாக விக்டோரியா கேயர் தெல்விக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக அழகி பட்டம் பெற்ற விக்டோரியா கேயர் தெல்விக்கிற்கு வெற்றி மகுடத்தை ஷெய்னிஸ் பலாசியோஸ் சூடினார். முதல் இடத்தை விக்டோரியா தட்டிச் சென்ற நிலையில், இரண்டாவது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மாவுக்கு கிடைத்தது. அதேபோல் மூன்றாவது இடத்தை மெக்சிகோவை சேர்ந்த மரியா ஃபெர்னாண்டா தட்டிச் சென்றார். தாய்லாந்தை சேர்ந்த சுசாடா சுவாங்கிரி மற்றும் வெனிசுலாவை சேர்ந்த இலியானா மார்க்கஸ் ஆகியோர் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்தனர்.

இதையும் படியுங்கள்... ஆசியாவின் மிகச்சிறிய நாடு எது? குட்டி நாட்டில் என்னலாம் நடக்குது பாருங்க!

Scroll to load tweet…

உலக அழகிப் போட்டியில் வெற்றிபெற்று உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டென்மார்க் நாட்டு அழகி விக்டோரியா கேயர் தெல்விக்கிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. உலக அழகி பட்டம் வென்றதும் விக்டோரியா பூரிப்பில் திளைத்தார். வெற்றிக் களிப்பில் அவர் முகம் நிறைந்த புன்னகையோடு சிரிக்க சக போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவருக்கு கிரீடமும் அணிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... அம்பானியின் ஆண்டிலியாவை விட பிரமாண்டமான வீடு! யாருடையது? எங்குள்ளது?