ஆசியாவின் மிகச்சிறிய நாடு எது? குட்டி நாட்டில் என்னலாம் நடக்குது பாருங்க!
பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் ஆசியா உலகின் மிகப்பெரிய கண்டமாக உள்ளது. ஆனால் ஆசிய கண்டத்தில் மிகச்சிறிய நாடு எது தெரியுமா? அதைப்பற்றி சுவாரஸ்மான செய்திகளை இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Smallest country in Asia
உலகில் மொத்தம் ஏழு கண்டங்கள் உள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா. உலகின் மிகச்சிறிய நாடு ஐரோப்பாவின் வாடிகன் நகரமாக கருதப்படுகிறது.
Smallest country
ஆனால் ஆசிய கண்டத்தில் மிகச்சிறிய நாடு எது தெரியுமா? யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட பல போட்டித் தேர்வுகளிலும் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆசியாவின் அந்தக் குட்டி நாட்டைப் பற்றித்தான் இப்போது தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
Maldives
பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் ஆசியா உலகின் மிகப்பெரிய கண்டமாகும். இது கிழக்கில் பசிபிக் பெருங்கடல், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல், தெற்கில் இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கில் ஐரோப்பா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
Maldives tourism
உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியா, 48 நாடுகளைக் கொண்டுள்ளது. உலக மக்கள்தொகையில் 80% மக்கள் ஆசியாவில்தான் உள்ளனர். ஆசியாவின் மிகச்சிறிய நாடு மாலத்தீவுகள். அதன் பரப்பளவு 298 சதுர கிலோமீட்டர் மட்டுமே.
Maldives Economy
மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது. இது பல சிறிய தீவுகளாலான நாடு. இந்த நாட்டின் தலைநகரம் மாலே. வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் கவரும் நாடாகவும் உள்ளது. சுற்றலா மூலம் கிடைக்கும் வருவாய் இந்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மீன்பிடி மற்றும் கடல் சார் துறைகளும் முக்கியமாக உள்ளன.
Maldives Demographics
மாலத்தீவுகளில் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டின் மக்கள்தொகை சுமார் 4.28 லட்சம். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
Maldives Food
மாலத்தீவுகளின் "போடுபெரு" இசைப் பாணி மிகப் பிரசித்தமானது. 11ஆம் நூற்றாண்டை ஒட்டில் இந்த இசை தொடங்கியது என்று கருதப்படுகிறது. கிழக்கு ஆபிரிக்க இசையின் சாயலைக் கொண்டிருக்கிறது. குழுவாக நடனம் ஆடியபடியே இசைக்கப்படுகிறது. மாலத்தீவு தீவு நாடாக இருப்பதால் பலவகையான கடல் உணவுகளுக்கும் பெயர் பெற்றது.