லூசியானா கடற்கரை.. தென்பட்ட மிக மிக அரியவகை பிங்க் நிற டால்பின் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
மெக்ஸிகோ வளைகுடாவை பொறுத்தவரை, இயல்பான சாம்பல் நிற டால்பின்கள் தான் அங்கு அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் லூசியானா கடற்பகுதியில் அரியவகை இளஞ்சிவப்பு நிற டால்பின் ஒன்று நீந்திக் கொண்டிருந்தது படமாக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடித்து வரும் துர்மன் கஸ்டின் என்பவரால் படமெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 12ம் தேதி அன்று மெக்சிகோ வளைகுடாவிற்கு அருகிலுள்ள கேமரூன் பாரிஸ் பகுதியில் அந்த நபர் ஒன்றல்ல, இரண்டு பிங்க் நிற டால்பின்களை கண்டுள்ளார். இதுபோன்ற பல அரிதான விலங்குகளை தான் கடலில் கொண்டுள்ளதாகவும், ஆனால் இந்த பிங்க் நிற டால்பின் உண்மையில் தன் வாழ்நாளில் அவர் கண்ட ஒரு அற்புத காட்சி என்றும் அவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
ஆப்கனில் பெண்கள், சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: ஐ.நா., அறிக்கை!
தென் அமெரிக்காவில் உள்ள நன்னீர் நதிப் படுகைகளில், பிங்க் நிற டால்பின் என்று அழைக்கப்படும் ஒரு டால்பின் இனம் இருந்தாலும், அது திரு. கஸ்டின் சந்தித்த இனமாக இருக்க வாய்ப்பில்லை என்று கடல்வாழ் உயிரின அறிஞர்கள் கூறுகின்றனர். மெக்ஸிகோ வளைகுடாவை பொறுத்தவரை இயல்பான சாம்பல் நிற டால்பின்கள் தான் அங்கு அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ வேர்ல்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, இளஞ்சிவப்பு எனப்படும் பிங்க் அல்லது முழுமையாக வெள்ளை நிறத்தில் உள்ள டால்பின்கள் அரிதானவை. பொதுவாக மிருகங்களிடம் காணப்படும் Albino என்ற நிறமி குறைபாடு உள்ள காரணமாக இவை இந்த நிறத்தில் உள்ளது. சில முறை இதுபோன்ற அரியவகை உயிரினங்கள் பிடிக்கப்பட்டு ஒரு இடத்திற்குள் அடைக்கப்படுவதும் உண்டு என்று கூறியுள்ளது அந்த நிறுவனம்.
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு பிங்க் நிற டால்பின் லூசியானா கடற்கரையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.