சிக்கிய சில்லறை விற்பனையாளர்களில், மூன்று பேர் சரியான உரிமம் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டது.

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஆறு சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து சுமார் 600 கிலோவுக்கும் அதிகமான, சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) இன்று வியாழன் அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 12 அன்று, உணவு பொருட்களை விற்கும் எட்டு சில்லறை விற்பனையாளர்களிடம் நடத்திய சோதனையின் போது, ​​தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட மற்றும் பச்சை இறைச்சியை ஆறு நிறுவனங்களில் விற்பனை செய்வதை SFA அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இவற்றில் பன்றி இறைச்சி, கோழி, மாட்டிறைச்சி, வாத்து மற்றும் மீன் பொருட்கள் அடங்கும்.

சிங்கப்பூரின் 3வது பெரிய டாக்ஸி நிறுவனமான Trans-Cab.. டீல் பேசி முடித்த Grab - ஓட்டுனர்களுக்கு ஜாக்பாட் தான்!

சிக்கிய சில்லறை விற்பனையாளர்களில், மூன்று பேர் சரியான உரிமம் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டது. ஆறு நிறுவனங்களிடம் தொடர்ச்சியாக விசாரணையை நடத்தி வருகின்றது SFA.
அறியப்படாத மூலங்களிலிருந்தும், உரிமம் பெறாத உணவு நிறுவனங்களிலிருந்தும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உணவுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக SFA தெரிவித்துள்ளது.

வியாபாரிகள் மீதான குற்றம் நிரூபணமானால், இறைச்சி மற்றும் கடல் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக இறக்குமதி செய்தவர்களுக்கு $50,000 வரை அபராதம் விதிக்கப்படும், அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் சில சமயங்களில் மேற்குறிய இரு தண்டனைகளும் விதிக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு.

உலகின் வலிமையான பாஸ்போர்ட் சிங்கப்பூர்: இந்தியாவுக்கு எந்த இடம்?