18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்படும் தடுப்பூசியால் ஆபத்தா? வெளியான எச்சரிக்கையால் பரபரப்பு!!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை போடுவோருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

vaccine for people over age 18 is dangerous says us food and drug administration

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை போடுவோருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் தடுப்பூசி ஆலோசனைக் குழு ஜான்சன் அண்ட்  ஜான்சன் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போட பரிசோதனை நடத்தியது. கடந்தாண்டு பிப்ரவரியில், ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டிற்கு போட அனுமதித்தது. ஆனால், இந்தத் தடுப்பூசியைப் போட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, கால்களில் வீக்கம், வயிற்று வலி, தலைவலி, பார்வை மங்கல் போன்ற பிரச்னைகள் வந்துள்ளன. அதனால், ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் புதிய எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

vaccine for people over age 18 is dangerous says us food and drug administration

அதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போடுவதால், மக்களுக்கு ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட மதிப்பாய்வின் அடிப்படையில், இந்த தகவல்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து உயிரியல் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பீட்டர் மார்க்ஸ் கூறுகையில், இந்த தடுப்பூசியை போடுவதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த தடுப்பூசியில் டி.டி.எஸ் அளவு அதிகமாக இருப்பதைக் கண்டறியப்பட்டது.

vaccine for people over age 18 is dangerous says us food and drug administration

இந்த ஆண்டு மார்ச் 18 அன்று, 60 டி.டி.எஸ் வழக்குகளை அடையாளம் கண்டது. அவற்றில் ஒன்பது மிகவும் கடுமையானவை என்றார். ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பல நாடுகளும் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் புதிய எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios