மூன்று வாரமாக வீட்டை விட்டு வெளியவே வரல... கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் அமெரிக்கப் பெண்...!
இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் 3 வாரங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த அமெரிக்க பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா பாதிப்பில் சீனா, இத்தாலியை எல்லாம் பின்னுக்குத்தள்ளி விட்டு அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,528 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் மட்டும் 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் 3 வாரங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த அமெரிக்க பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லோட்டே பகுதியில் வசிப்பவர் ரேச்சர் பர்மெர்ட், இவருக்கு ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருப்பதால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, 3 வாரமாக வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் தென்பட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் ரேச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடைகளில் பொருட்களை வாங்க ரேச்சரின் கணவர் மட்டுமே வெளியே சென்று வந்ததாகவும், ஆனால் இருவரும் வேறு, வேறு அறையில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு வரும் கடிதங்களை கூட கையுறை மூலமாக மட்டுமே எடுத்து வந்ததாக தெரிவித்த அந்த பெண்மணி, அடுத்த கூறிய தகவலின் மூலமாக தான் கொரோனா தொற்றுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அவரது வீட்டிற்கு பெண்மணி ஒருவர் மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்துள்ளார். அவரிடமிருந்து கையுறை அணிந்து கொண்டு பொருட்களை வாங்கிய ரேச்சர், அந்த பெண் கொடுத்த மளிகை பொருட்களை கிளாஸ் அணியாமல் எடுத்து வைத்துள்ளார்.
தற்போது டோர்டெலிவரி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவர் கொண்டு வந்த மளிகை பொருட்களை தொட்டதன் மூலமாக ரேச்சருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். இருப்பினும் வீட்டிற்குள்ளேயே இருந்த பெண்ணுக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்று அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க பெண்ணிற்கு ஏற்பட்ட இந்த சோகம், கொரோனா வைரஸ் தொற்று எப்படி எளிதில் பரவுகிறது என்பதற்கு சிறந்த உதாரணம்.