தோசைக்கு இப்படி ஒரு பெயரா? அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அமெரிக்கா உணவகம்... வைரலாகும் புகைப்படம்!!
அமெரிக்க உணவகம் ஒன்றில் அனைத்து உணவுகளின் பெயர்களும் வித்தியாசமான முறை மாற்றப்பட்டுள்ளது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க உணவகம் ஒன்றில் அனைத்து உணவுகளின் பெயர்களும் வித்தியாசமான முறை மாற்றப்பட்டுள்ளது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு அமெரிக்க உணவகத்தின் மெனு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அனைத்து பிரபலமான தென்னிந்திய உணவுகளும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலப் பெயர்களுடன் இருந்தது. அதுதான் அதில் வியப்பை ஏற்படுத்தும் விஷயமே. தோசையை நேக்கட் க்ரீப் என்றும், சாம்பார் வடை டங்க்ட் டோனட் டிலைட் என்றும் அதில் இருந்தது.
இதையும் படிங்க: இலங்கையில் விவசாயிகள் கடன் ரத்து... அறிவித்தார் அந்நாட்டு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க!!
இட்லியைப் பொறுத்தவரை, இது பிரபலமான இந்திய காலை உணவு. அது டங்க்ட் ரைஸ் கேக் டிலைட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றமே வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதன் விலைன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு க்ரீப் $18.69 (ரூ. 1,491)க்கு விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: செவ்வாய் கிரகத்தில் நூடுல்ஸ் போன்ற பொருள்; நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்!!
அதேசமயம் நேக்கட் க்ரீப் $17.59 (ரூ. 1,404) ஆகும். மறுபுறம், டங்க்டு டோனட் டிலைட் $16.49 (ரூ. 1,316) மற்றும் டங்க்டு ரைஸ் கேக் டிலைட் விலை $15.39 (ரூ. 1,228) ஆகும். விலைகள் தோராயமானவை, ஆனால் இணையவாசிகள் அவற்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுக்குறித்து டிவிட்டரில் ஒருவர், இது தோசை என்றே அழைக்க வேண்டும் என்றும், இதன் விலை 100 ரூபாய் என்றும் 1500 ரூபாய் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பலரும் இதுக்குறித்த தங்களது கருத்துகளை டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.