சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 203 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 46,399 ஆக அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 9,25,053 பாதிக்கப்பட்டு அவர்களில் 1,93,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு  6 லட்சத்து 85 ஆயிரத்து 223 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 34 ஆயிரத்து 935 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது. சீனாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. 

இதையும் படிங்க: கொரோனாவால் திக்குமுக்காடும் அமெரிக்கா... ஒரேநாளில் 1000 பேர் பலி...!

தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 03 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிழந்தோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

சீனா பலி எண்ணிக்கையை சரியாகத் தான் சொல்லி உள்ளது என்று எப்படி நமக்கு தெரியும், அவர்கள் சொல்லும் கணக்கு குறைவாக இருக்கிறதே எனக்கூறி பகீர் கிளப்பியுள்ளார். மேலும்  சீனா - அமெரிக்க இடையிலான உறவில் சிக்கல் இல்லை என்று தெரிவித்துள்ள ட்ரம்ப் அந்த நாட்டின் புள்ளி விவரம் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!

சீனாவில் ஏற்பட்ட நோய் தொற்றுகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்து  சர்வதேச நாடுகளுக்கு தவறான தகவலை அளித்திருக்கலாம் என்று அமெரிக்காவின் உளவுத்துறையும் சந்தேகம் எழுப்பியுள்ளது. இந்நிலையில் ட்ரம்பின் இந்த குற்றச்சாட்டு, உலகின் சந்தேக பார்வையை சீனாவை நோக்கி திருப்பியுள்ளது. 

இதையும் படிங்க: “குட்டி பப்பு”வுக்கு பெயர் வச்சாச்சு... செல்ல மகளின் புகைப்படத்துடன் அறிவித்த ஆல்யா மானசா....!

கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே பனிப்போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனாவை பரப்பியதாக சீனாவும், கொரோனா வைரஸை திட்டமிட்டே சீனா பரப்பியதாகவும் இருநாடுகளும் மாற்றி, மாற்றி குற்றச்சாட்டி வருகின்றன.