2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி... அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!!
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஜனநாயகத்திற்கு துணை நிற்க வேண்டிய தருணம் இருக்கும். அவர்கள் தங்களது அடிப்படை சுதந்திரத்திற்காக நிற்க வேண்டி இருக்கும்.
இதையும் படிங்க: ஆபரேஷன் காவேரி: முதல்கட்டமாக 278 இந்தியர்களுடன் சூடானில் இருந்து புறப்பட்டது இந்திய போர்க்கப்பல்..
இது நம்முடையது என நான் நம்புகிறேன். அதனாலேயே, நான் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கிறேன். எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். நாம் வேலையை முடிப்போம் என்று தெரிவித்துள்ளார். இதேபோல், குடியரசு கட்சியின் லார்ரி எல்டரும் அதிபர் வேட்பாளராக போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதாக குற்றச்சாட்டு… இந்திய வம்சாவளிக்கு சிங்கப்பூரில் நாளை தூக்கு!!
இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், அமெரிக்கா சரிவை நோக்கி செல்கிறது. ஆனால், இந்த சரிவு தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபருக்கான போட்டியில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.