அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடந்திய நபர் சடலமாக மீட்பு! 48 மணிநேரம் நீடித்த தேடல் முடிவு
மைனே ஆளுநர் ஜேனட் மில்ஸ், "ராபர்ட் கார்டினால் இனி யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மைனே துப்பாக்கிச் சூட்டை நடத்திய முக்கியக் குற்றவாளியான ராபர்ட் கார்டு சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 48 மணிநேரமாக நீடித்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது என்று லிஸ்பன் மைனே காவல்துறை கூறியுள்ளது.
வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. பின்னர் 18 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 13 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விஷம் வைத்துக் கொல்லப் பார்க்கிறார்கள்... பாகிஸ்தான் சிறையில் மரண பீதியில் அலறும் இம்ரான் கான்
சடலமாக மீட்கப்பட்ட ராபர்ட் கார்டு 40 வயதானவர் என்றும் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரராக இருந்த அவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் தன்னைத்தானே சூட்டுக்கொண்டு இறந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கார்டு சடலமாகப் பிடிபட்டதை உறுதிப்படுத்திய மைனே ஆளுநர் ஜேனட் மில்ஸ், "ராபர்ட் கார்டினால் இனி யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ராபர்ட் கார்டு, இராணுவ ரிசர்வ் சார்ஜென்ட், அருகிலுள்ள நகரமான போடோயினைச் சேர்ந்தவர், ஒரு திறமையான துப்பாக்கி பயிற்சியாளர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது ராணுவப் பணியின்போது பெட்ரோலியம் விநியோக நிபுணராக இருந்தார் என்றும் தெரிகிறது.
வடகிழக்கு பல்கலைக்கழகம், அசோசியேட்டட் பிரஸ் மற்றும் யுஎஸ்ஏ டுடே ஆகியவை உருவாக்கியவுள்ள கூட்டுத் தரவுத்தளத்தின்படி, மைனே மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலைச் சம்பவம், இந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த 36வது துப்பாக்கிச் சூடு படுகொலை ஆகும்.
காசாவில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கு கேரண்டி கிடையாது! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு