காசாவில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கு கேரண்டி கிடையாது! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
காசாவில் செய்தி சேகரித்துவரும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள காசா பகுதியில் இருக்கும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காசாவில் செய்தி சேகரித்துவரும் ராய்ட்டர்ஸ் மற்றும் ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ் (AFP) ஆகிய சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் இஸ்ரேலிய ராணுவம் இதனைக் கூறியுள்ளது.
பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இயங்கிவரும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினர் அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலை ராக்கெட் வீசித் தாக்கினர். மேலும் இஸ்ரேலிய பகுதிக்குள் ஊடுருவி, 1,400 பேரைக் கொன்றனர். இதற்காக இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் மீது பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது. இந்தத் தாக்குதல்களால் சுமார் 7,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காசாவில் உள்ள பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து சர்வதேச செய்தி நிறுவனங்களான ராய்ட்டர்ஸ் மற்றும் ஏஎஃப்பி (AFP) ஆகியவை இஸ்ரேல் ராணுவத்துக்கு கடிதம் எழுதியிருந்தன. காசாவில் உள்ள தங்கள் பத்திரிகையாளர்கள் மீது இஸ்ரேலிய ராண தாக்குதல் நடத்ததாது என்று உத்தரவாதம் கொடுக்குமாறு அதில் கோரப்பட்டிருந்தது. இதற்குப் பதில் அளித்து ராய்ட்டர்ஸ் மற்றும் AFP க்கு இஸ்ரேலிய ராணுவம் இந்த வாரம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில், "காசா முழுவதிலும் உள்ள அனைத்து ஹமாஸ் ராணுவ நடவடிக்கைகளையும் இஸ்ரேலிய ராணுவம் குறிவைத்திருக்கிறது. ஹமாஸ் வேண்டுமென்றே பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் ராக்கெட்டுகள் தவறுதலாக காசாவில் உள்ள மக்களையே கொல்லக்கூடும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. "இந்த சூழ்நிலையில், உங்கள் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. மேலும் அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்" என்றும் அறிவுறுத்தியுள்ளது.
காஸாவில் இயங்கும் எத்தனை செய்தி நிறுவனங்கள் இதேபோன்ற கடிதத்தைப் பெற்றுள்ளன என்ற விவரம் தெரியவில்லை. இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் போகணுமா? உங்களுக்காக ஏர் இந்தியாவின் சூப்பர் அறிவிப்பு! யூஸ் பண்ணிக்கோங்க!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D