அதிபர் ஜோ பைடன் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி; ஏன்? எதற்காக?
வரும் கோடை காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ளலாம். அரசுமுறை பயணமாக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். பைடன் விடுத்து இருக்கும் அழைப்பை மோடி ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது இருநாட்டு தலைவர்களும் இதற்கான பணிகளில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியா, அமெரிக்கா இருநாடுகளும் வணிகம், கல்வி, தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு திட்டமிட்டுள்ளன. வரும் மே மாதம் இதற்கான முன் முயற்சியை எடுப்பதற்கு இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கான அறிவிப்பையும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டு இருக்கும் செய்தியில், எதிர்கொண்டு இருக்கும் தொழில்நுட்ப சவால்களையும், வளர்ந்து கொண்டு இருக்கும் தொழில்நுட்ப சவால்களையும் எதிர்கொள்ள இருநாடுகளும் ஒத்துழைத்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜி-20 தொடர்பான தொடர் நிகழ்வுகளை இந்தியா நடத்துகிறது. செப்டம்பரில் உச்சிமாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மற்ற உலகத் தலைவர்களுடன் ஜோ பைடனும் கலந்து கொள்கிறார். இதற்குப் பின்னர் அமெரிக்காவில் இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பிற்கான தேதிகளை ஆய்வு செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜூலை மாதம் அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டு அமர்வுகள் உள்ளன. அப்போது மோடிக்கு எந்த உள்நாட்டு நிகழ்வுகளோ, வெளிநாட்டு நிகழ்வுகளோ இல்லை என்று கூறப்படுகிறது.
விபரீதமாக முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு! 15 சிறுவனின் பரிதாப நிலை!
அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் பங்கேற்க மற்றும் வெள்ளை மாளிகையில் இரவு விருந்தில் பங்கேற்க குறைந்தது இரண்டு நாட்கள் தேவை. ஜி-20 உச்சி மாநாடு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு, தனது வெளிநாட்டு நிகழ்வுகளில் முன்பே பிரதமர் மோடி ஈடுபடக் கூடும் என்று தெரிகிறது.
கடந்த டிசம்பரில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோனை தனது முதல் அரசு விருந்துக்கு பைடன் அழைத்து இருந்தார்.
இதற்கிடையில், மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், உலகின் முன்னணி அறிவுசார் பொருளாதாரங்களாக திகழும் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மை முக்கிய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதாக இருக்க வேண்டும் என்று பைடன் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்:
* இருநாடுகளுக்கும் இடையே அறிவியல்சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு, உடன்பாடு ஏற்படுத்துதல், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ், தொழில்நுட்பம், ஒயர் இல்லாத தொழில்நுட்ப புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.
* கல்வி, தொழிற்சாலை, ஆராய்ச்சிகளில் இருநாடுகளும் பங்கேற்பதில் கவனம் செலுத்த வேண்டும். இருநாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப ஏற்றுமதிகள், ஹெச்பிசி தொழில்நுட்ப பறிமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
* ஜெட் என்ஜின்கள், வெடிமருந்துகள் தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் பிற அமைப்புகள் தொடர்பான திட்டங்களை ஆராய்வதில் ஆரம்ப கவனம் செலுத்தி, கூட்டு வளர்ச்சி மற்றும் உற்பத்திக்காக இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரைவுபடுத்த புதிய இருதரப்பு பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு மேற்கொள்தல்.
* ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து இந்தியாவால் இயக்கப்படும் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களை இயக்கக்கூடிய ஜெட் என்ஜின்களை கூட்டாக தயாரிக்க அமெரிக்கா விண்ணப்பித்துள்ளது. இதற்கு விரைவில் அமெரிக்கா உறுதியளிக்கிறது.
* கடல்சார் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கண்காணிப்பு (ISR) செயல்பாட்டு நிகழ்வுகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நீண்டகால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
அமெரிக்க மற்றும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களை இணைக்கும் புதிய "தொழில்நுட்ப பாலம்" அமைத்தல்.
* தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய சவாலை இருநாடுகளும் எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக Resilient Semiconductor Supply Chains துறையில் இருதரப்பு நாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், இந்தியாவில் இதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், உற்பத்தி மற்றும் புனரமைப்பு சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சியை ஏற்றுக் கொண்டு இரு நாடுகளும் உலகளாவிய திறமையான பணியாளர்களை ஊக்குவித்தல், இந்தியாவில் கூட்டு முயற்சிகள் மேற்கொள்தல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை ஊக்குவித்தல்
* யு.எஸ் செமிகண்டக்டர் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் (எஸ்.ஐ.ஏ) இந்தியா எலக்ட்ரானிக்ஸ் செமிகண்டக்டர் அசோசியேஷன் (ஐஇஎஸ்ஏ) உடன் இணைந்து இந்திய அரசாங்க செமிகண்டக்டர் மிஷன் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பணிக்குழுவை வரவேற்கிறது.
* இந்த பணிக்குழு, இந்த துறைகளில் இருக்கும் சவால்கள் குறித்து வர்த்தகத் துறை மற்றும் இந்திய செமிகண்டக்டர் மிஷனுக்கு பரிந்துரைகளை வழங்கும். மேலும் அமெரிக்க - இந்தியா வர்த்தகத்திற்கு ஆலோசனை வழங்கும். இந்த பணிக்குழுவானது தொழிலாளர்களின் மேம்பாடு, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பரிமாற்ற வாய்ப்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து எளிதாக்கும்.