Airportல் ஒட்டகச்சிவிங்கி கழிவுடன் சிக்கிய பெண்.. படக்குனு மடக்கிய officers - அத ஏன் எடுத்துவச்சாங்க தெரியுமா?

பொதுவாகவே பெண்களுக்கு ஆபரணங்களை அணிந்து கொள்வது மிகவும் பிடிக்கும். அதுவும் சற்று தனித்துவமான நகைகள் என்றால் நிச்சயம் எந்த பெண்ணும் அதை வேண்டாம் என்று சொல்லமாட்டார். அப்படி ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் தற்போது நடந்துள்ளது.

US airport authorities stopped women after she had a box of giraffe poo with her ans

அமெரிக்காவின் Minneapolis-Saint Paul விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி ஒரு பெண் தனது பொருட்களோடு விமானத்தில் வந்து இறங்கி உள்ளார். அப்பொழுது வழக்கம்போல விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் வைத்திருந்த ஒரு சின்ன பெட்டியில் வித்தியாசமான பொருட்கள் இருப்பதை இயந்திரங்கள் காட்டி உள்ளது. 

உடனே அந்த பெண்ணை தனியே அழைத்து அவருடைய அந்த சின்ன பெட்டியை விமான நிலைய அதிகாரிகள் சோதித்துள்ளனர். அப்பொழுதுதான் அதற்குள் ஒட்டகசிவிங்கியின் கழிவுகள் இருப்பதை அவர்கள் கண்டுள்ளனர். ஆனால் அமெரிக்காவுக்குள் கழிவுகளை கொண்டு வருவது என்பது தடைசெய்யப்பட்ட ஒரு விஷயமாக கருதப்படுகிறது. 

இஸ்ரேலுக்கு உதவ போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!!

இருப்பினும் முறையான அனுமதி பெற்று ஒட்டகசிவிங்கிள் கழிவுகளை விமானத்தில் எடுத்துச் செல்லலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த பெண்மணி எந்தவித உரிய அனுமதியும் பெறாமல் அமெரிக்காவிற்குள் ஒட்டகச்சிவிங்கியின் கழிவுகளை எடுத்து வந்துள்ளார். அவர் கென்யா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது, அங்கே இருந்து ஒட்டகச்சிவிங்கியின் கழிவுகளை எடுத்து பத்திரப்படுத்தி அதை அமெரிக்காவில் கொண்டு வந்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த பெண் தான் கழிவுகளை எடுத்து வந்ததை ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் கழிவுகளை மற்றும் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டு அவரை விமான நிலையத்தில் இருந்து செல்ல அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். பின்னர் அந்த கழிவுகளை முறைப்படி அதிகாரிகள் அப்புறப்படுத்தி உள்ளனர். 

Giraffe Poo

சரி அந்த பெண் ஏன் ஒட்டகச்சிவிங்கி கழிவுகளை எடுத்துவந்தார் தெரியுமா?

இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் அந்த பெண் அமெரிக்காவிற்குள் ஒட்டகச்சிவிங்கியின் கழிவுகளை எடுத்து வந்ததற்கான காரணம், அதை வைத்து ஒரு நெக்லஸ் செய்ய அவர் விரும்பியுள்ளார். ஏற்கனவே Moose என்று அழைக்கப்படும் பெரிய வகை மானின் கழிவுகளை கொண்டு அதிலும் நெக்லஸ் செய்து அவர் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரர்களுக்கு வருகிறது ஒரு நற்செய்தி.. சீரடையும் காற்றின் நிலை - NEA அதிகாரிகள் வெளியிட்ட அப்டேட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios