China Covid-19 Lockdown: கையைப் பிசையும் சீனா! கொரோனா பரவல்அதிகரிப்பு ! IPhone city 5 நாட்கள் லாக்டவுன்
சீனாவின் ஐ-போன் நகரம் என்று அழைக்கப்படும் ஹெங்ஸ்ஹூ நகரில் கொரோனா பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளதால் 5 நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஐ-போன் நகரம் என்று அழைக்கப்படும் ஹெங்ஸ்ஹூ நகரில் கொரோனா பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளதால் 5 நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
ஹெங்ஸ்ஹூ நகரில் கொரோனா பரவல் வேகமாக இருப்பதையடுத்து நாளை முதல்(25ம்தேதி) 29ம் தேதிவரை லாக்டவுன் விதித்து நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நகரில் நேற்று மட்டும் ஒரே நாளில் 996 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழப்பு 300 பேர் காயம்; மீட்புப் பணிகள் தீவிரம்!!
சீனாவில் கடந்த 3 வாரங்களில் மட்டும் 2.50லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் நேற்று ஒரேநாளில் 28ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
சீனாவில் நாளுக்கு நாள், கொரோனா பரவல் ஒவ்வொரு நகராக அதிகரி்த்து வருவதால், என்ன செய்வதென்று தெரியாமல் அரசு கையைப் பிசைகிறது. 100 சதவீதம் கொரோனா இல்லாத சூழலைக் கொண்டுவருவதற்கு சீனா ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதனால் பொருளாதார நிலையும் மோசமாகி இருந்தது. இப்போது கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து, மீண்டும் ஊரடங்கு நடவடிக்கை ஏராளமான நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கவலையில் சீனா! விடாமல் துரத்தும் கொரோனா !3 வாரத்தில் 2.53 லட்சம் பாதிப்பு
ஹெங்ஸ்ஜூ நகரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிக்கும் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் ஏராளமானோர் வெளியேற்றப்பட்டபின் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பாக்ஸ்கான் தொழில்நுட்ப குழுமத்தில் இருந்த தொழிலாளர்களும் கொரோனா காரணமாக வெளியேற்றப்பட்டனர்
ஹெங்ஸ்ஜூ நகர நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “ அதிகமான பரவல் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள், வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டும், வளாகத்தைவிட்டும் வெளியே வரக்கூடாது. தினசரி பிசிஆர் பரிசோதனை எடுப்பது கட்டாயமாகும்”எனத் தெரிவித்துள்ளது.
சீன அரசின் அறிவிப்பின்படி, லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களில் ஐபோன் நகரம் சேர்க்கப்படவில்லை. அதேசமயம், உள்ளூரில் இருக்கும் கொரோனா பரவல் தொடர்பாக நகர நிர்வாகம் ஊரடங்கு குறித்து எந்த முடிவும் எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் செயல்படும் பகுதி அதிகமான கொரோனா பரவல் இருக்கும் பகுதியாக இருப்பதால் அங்கு ஊரடங்கும், கட்டுப்பாடுகளும் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன.
கலக்கத்தில் சீனா! அதிகரிக்கும் கொரோனா! 100 ஆண்டு பழமையான ஜிஜியாங் நாடக அரங்கு மூடல்
சமீபத்தில் சீன அரசு வைரஸ் குறித்து 20 முக்கிய அறிவுரைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டது. அதில், மக்களுக்கு கட்டாய கொரோனோ பரிசோதனை, கட்டாய லாக்டவுன் போன்றவற்றை பரிந்துரைத்திருந்தது. இந்த அறிவுரை கையேடு வருவதற்கு முன், பெய்ஜிங் முதல் ஷாங்காய் வரை மக்கள் சுதந்திரமாக நடமாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.ஆ னால், இப்போது கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன
- China Covid-19 lockdown
- China Covid-19 lockdown News
- China Iphone Factory
- China iPhone factory violence case
- Violent protests at iPhone factory china
- Workers clash with police
- Zhengzhou
- chengdu china lockdown
- china
- china covid
- china covid 19 regulations
- china covid cases
- china covid lockdown
- china covid lockdowns
- china covid outbreak
- china covid restrictions
- china covid restrictions 2022
- china covid restrictions now
- china covid restrictions update
- china covid-19
- china covid-19 restrictions
- china economy
- china foxconn workers protest
- china insight
- china insights
- china iphone city
- china iphone factory violence
- china iphone factory violence case news today
- china lock down
- china lockdown
- china lockdown protest
- china lockdowns
- china news
- china politics
- china's covid zero policy
- covid china
- covid lockdown china
- foxconn china issue
- foxconn plant china
- iPhone city
- lockdown in china
- locked down
- millions again under lockdown in china