நெருப்போடு விளையாடாத பொசுங்கிடுவ... ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்..!
ஈரான் நாடு நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறது என அந்நாட்டுக்கு பகிரங்கமாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் நாடு நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறது என அந்நாட்டுக்கு பகிரங்கமாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதன்படி, 300 கிலோ கிராம் அளவுக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதற்கு ஈரான் ஒப்புக் கொண்டதால், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் வாபஸ் பெறப்பட்டன.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஒப்பந்தப்படி ஈரான் நடந்து கொள்ளவில்லை என குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், மீண்டும் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். இதன் காரணமாக, அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கிடையே, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பு, அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை காட்டிலும் அதிகரித்து இருப்பதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது.
அந்நாடு யுரேனியம் தயாரிப்பை அதிகப்படுத்தி இருப்பதை சர்வதேச அணுசக்தி அமைப்பும் உறுதிப்படுத்தி உள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையில், அதை ஈரான் மீறியிருப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில், ‘யுரேனியம் செறிவூட்டலை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஈரான்அணு ஆயுதங்களை கொண்டிருப்பது இப்பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்தும்,’ என்றார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேட்ட போது, ‘‘ஈரானுக்கு எந்த செய்தியும் இல்லை. என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே ஈரான் செய்து கொண்டிருக்கிறது. யாருடன் விளையாடுகிறார்கள் என அவர்களே அறிவார்கள். அவர்கள் நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்,’’ என எச்சரிக்கை விடுத்தார்.