அமெரிக்க நிறவெறியை கழுவி ஊற்றிய ஐ.நா சபை..!! அடிமேல் அடிவாங்கும் ட்ரம்ப்..!!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல ட்விட்டரில் வெறுப்பு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இது போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரம் அடைய வைத்துள்ளது.
அமெரிக்க சமுதாயத்தில் "நிறுவன இனவெறியை" முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைய தலைவர் மைக்கேல் பெஷெட். தெரிவித்துள்ளார். அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம், கருப்பின மக்களுக்கு எதிரான போலீஸ் வன்முறையை தோலுரித்துக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து ஏற்கனவே நெருக்கடியில் உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் விசாரிக்கப்பட்டார், அப்போது விசாரணை அதிகாரி அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார், தனக்கு மூச்சு திணறுகிறது தன்னை தயவுசெய்து விடுவிக்கும்படி சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக பிளாய்டு போராடியும் அந்த அதிகாரி அவரை விடவில்லை, இதனால் பிளாய்டு மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னபொலிஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளன. மினசோட்டா, ஜார்ஜியா, ஓகியோ, கென்டக்கி, டெக்ஸாஸ், கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களில் கலவரம் காட்டுத்தீயாக பரவி வருகிறது, பிளாய்டைக் கொன்ற போலீஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்னபொலிஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது நிறவெறியினால் நடத்தப்பட்ட படுகொலை எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உணவகங்கள், வங்கிகள், வணிக வளாகங்கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல ட்விட்டரில் வெறுப்பு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இது போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரம் அடைய வைத்துள்ளது.
"இந்த குண்டர்கள் ஜார்ஜ் பிளாய்டுக்கு அவமரியாதை ஏற்படுத்துகின்றனர்" என்றும் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட வேண்டி வரும் என்றும் போராட்டக்காரர்களை எச்சரித்திருப்பது, போராட்டத்தை மேலும் வேகமெடுக்க வைத்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்க மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில், தற்போது அங்கு வெடித்துள்ள போராட்டத்தால் அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் மைக்கேல் பெஷெட், அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டம் கருப்பின மக்களுக்கு எதிரான போலீஸ் வன்முறையை அம்பலப்படுத்தியுள்ளது, அமெரிக்க சமுதாயத்தில் நிலவிவரும் நிறுவன நிறவெறியை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், மின்னபொலிசில் ஏற்பட்ட போராட்டம் , அமெரிக்க முழுவதும் பரவியுள்ளது, அமெரிக்க சமுதாயத்தை பயமுறுத்தும் உள்ளூர் மற்றும் நிறுவன இனவெறிக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
46 வயதான ஆபிரிக்க-அமெரிக்கர் ஃபிலாய்ட் கொலைச் சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான நகரங்களில் பரவியிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் எழும் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவில் இனவெறி மற்றும் வன்முறை ஏற்பட்டால் அவற்றின் பிரச்சினைகள் உடனே தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் மைக்கேல் பெஷலெட் வலியுறுத்தியுள்ளார். மேலும் கூறிய அவர், அவர்கள் தங்கள் சோகமான வரலாற்றிலிருந்து மீள விரும்புகிறார்கள், நிறவெறியால் நேர்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் கொலைகளை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க வீதிகளில் குரல்கள் எழுப்பப்படுகின்றன. போலீஸ் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர குரல் எழுப்புவது அவசியமாகியுள்ளது, நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க நிச்சயம் குரலெழுப்பியே ஆக வேண்டும். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள போராட்டம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்துகிறது, இது போலீஸ் காவலில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுவதை குறிக்கிறது, இது இனபாகுபாட்டிலிருந்து விடுபட தொலைதூர சீர்திருத்தங்கள் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.