உலகத்தில் நிகழப்போகிறது பேரழிவு..!! பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடும் என எச்சரிக்கை..!!
கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடியால் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த மாதம் எச்சரித்த குடரெஸ், எதிர்வரும் நாட்களில் பட்டினி, பஞ்சம் போன்ற விஷயங்கள் உலகில் தீவிரமாக ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக இதுவரை தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை, அதை நாம் ஒன்றாக இணைந்து உருவாக்க வேண்டும் என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். தடுப்பூசியை உருவாக்கினால் மட்டும் போதாது, அது உலகளவில் ஒவ்வொரு நபருக்கும் சென்று சேர அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கொரோனவைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் சுமார் 67 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த கடந்து 4 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகள் ஊரடங்கு, சமூக விலகல் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் வைரசை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு பிரத்தியேக தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அதற்கான ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் மருந்து ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இன்னும் ஒரு சில மாதங்களில் வைரசுக்கு எதிரான பிரத்யேக தடுப்பூசி தயாராகும் என தகவல்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குடரெஸ், இதுவரை கொரோனாவுக்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, அதை நாம் ஒன்றாக இணைந்து உருவாக்க வேண்டும் என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும், தடுப்பூசியை உருவாக்கினால் மட்டும் போதாது, அது ஒவ்வொருவருக்கும், எல்லா இடங்களுக்கும் சென்று சேர உலகளாவிய ஒற்றுமையை நாம் காட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடியால் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த மாதம் எச்சரித்த குடரெஸ், எதிர்வரும் நாட்களில் பட்டினி, பஞ்சம் போன்ற விஷயங்கள் உலகில் தீவிரமாக ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், அனைவரும் ஒன்றிணைவது மட்டுமே அனைத்திற்கும் தீர்வாக இருக்க முடியும் என கூறியுள்ளார். கொரோனா தொற்று விவகாரத்தில் நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒற்றுமை தேவை என்பதை ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி.எஸ் திருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்தியா உதவ முயற்சிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள், சோதனை கருவிகள், மற்றும் பிபிஇ எனப்படும் முழு உடற்கவச உடைகள் போன்றவற்றை பிற நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.