இந்தியாவை மனதார பாராட்டிய ஐ.நா மன்றம்..!! உலக அளவில் நாட்டிற்கு கிடைத்த கௌரவம்..!!!
இந்தியாவில் நிரந்தர பிரதிநிதியாக சமீபத்தில் பதவியேற்ற டி.எஸ் திருமூர்த்தியும் அதில் கலந்து கொண்டார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், உலக நாடுகளுக்கு கொரோனா எதிர்ப்பில் முன்னுதாரணமாக இருந்துவரும் இந்தியா தெற்காசிய நாடுகளுக்கு மட்டுமல்லாது, பல்வேறு உலக நாடுகளுக்கும் உதவி புரிந்து வருவதாக ஐநா மன்றம் இந்தியாவை வெகுவாக பாராட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தோன்றிய இந்த வைரஸால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் நிலை குலைந்து போயுள்ளன. ஆனால் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கொரோனாவை மிகச் சாதுரியமாக எதிர்கொண்டு வருகிறது.
இதனால் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் நோய்தொற்றும், உயிரிழப்பும் குறைவாகவே உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவே மிகக்கடுமையாக பாதிக்கப்படும் என பல ஆராய்ச்சியாளர்கள் கூறி வந்த நிலையில், சரியான நேரத்தில் இந்தியா எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக பெருமளவில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை வாயாரப் பாராட்டி வருகின்றன. அதுமட்டுமல்லாது பல உலக நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிக்குளோரோகுயின், மாத்திரைகளையும், பாராசிட்டமால் மாத்திரைகளையும், டன் கணக்கான உணவு பொருட்களையும் இந்தியா வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் உலக அளவிலான நிலை குறித்து காணொளி காட்சி வழியாக ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்ரோஸ் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் நிரந்தர பிரதிநிதியாக சமீபத்தில் பதவியேற்ற டி.எஸ் திருமூர்த்தியும் அதில் கலந்து கொண்டார்.
அப்போது அவருடன் உரையாடிய அந்தோணியோ குட்ரோஸ், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு இந்தியா செய்து வரும் உதவிகளை பாராட்டுவதாக கூறினார். அதை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள திருமூர்த்தி, ஐநா சபை பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்ரோஸை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், அவர் இந்தியாவுக்கு வந்த நினைவுகளை அன்புடன் நினைவுகூர்ந்தார். உலக அளவிற்கு இந்தியா செய்து வரும் உதவிகளை மனமார பாராட்டினார். அதைத்தொடர்ந்து ஐநா சபை பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், ஐநாவின் நிரந்தர பிரதிநிதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள திருமூர்த்தியை வரவேற்கிறோம், அவருடன் இணைந்து செயல்படுவதை பொதுச் செயலாளர் எதிர்நோக்கி காத்திருக்கிறார் என்பதை நான் அறிவேன் என குறிப்பிட்டுள்ளார். இதில் இந்தியா நிரந்த பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.