- Home
- உலகம்
- இந்தியாவுக்கு எதிராக சகுனி வேலை..! பாகிஸ்தான் ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்திய பயங்கரவாதி..!
இந்தியாவுக்கு எதிராக சகுனி வேலை..! பாகிஸ்தான் ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்திய பயங்கரவாதி..!
பாகிஸ்தான் ராணுவம் என்னை ஆபரேஷன் சிந்தூருக்கு அழைத்ததாக பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் பாகிஸ்தான் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி ஒப்புக்கொண்டுள்ளார்.

திருந்தாத பாகிஸ்தான்
பாகிஸ்தான் இன்னும் தனது பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்குவதாகவே தெரியவில்லை. பாகிஸ்தான் ராணுவத்திற்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதற்கான, சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ந்து வெளியாகி வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை எப்படி பயன்படுத்த துடிக்கிறது என்கிற முக்கிய தகவல் மீண்டும் வெளியாகி இருக்கிறது.
பஹல்காம் தாக்குதலின் மூளையாக இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) முக்கியத் தலைவர், பாகிஸ்தான் ராணுவத்துடன் அந்த அமைப்பின் தொடர்புகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஹபீஸ் சயீத் தலைமையிலான எல்.இ.டி அமைப்பின் துணைத் தலைவரும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக இருந்தவருமான சைஃபுல்லா கசூரி, ‘‘தன்னை இராணுவ நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும், வீரர்களுக்கான இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளை நடத்தவும் பாகிஸ்தான் ராணுவத்தால் தொடர்ந்து அழைக்கப்படுகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு அச்சுறுத்தல்
பாகிஸ்தானில் நடந்த ஒரு பள்ளி நிகழ்ச்சியில் குழந்தைகளிடம் பேசும் போது சைஃபுல்லா கசூரி இதனைக் கூறி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். ‘‘நான் பாகிஸ்தான் ராணுவத்துடன் இருந்து இந்தியாவை மிரட்டினேன். இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்களை விடுத்தேன்’’ என சைஃபுல்லா கூறியுள்ளார்.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது. பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து இந்தியா தவறு செய்தது. காஷ்மீர் மீது குழு கவனம் வைத்துள்ளது. அந்தக் குழு அதன் காஷ்மீர் பணியில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது. ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாத மறைவிடங்களை மட்டுமே குறிவைத்து இந்தியா ஒரு பெரிய தவறைச் செய்தது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் தான் நான் பிரபலமடைந்தேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக நான் குற்றம் சாட்டப்பட்டேன். இப்போது என் பெயர் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது" என்றார்.
ஆபரேஷன் சிந்தூர்
ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் இருபத்தி ஆறு பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்தது. பதிலுக்கு, மே 7 ஆம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியா குறிவைத்தது. நான்கு நாட்கள் பதற்றத்திற்குப் பிறகு, மே 10 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
