மோடியின் நடவடிக்கையை வியந்து வியந்து பாராட்டிய ஐநா..!! நிச்சயம் இத்தாலிபோல நிலமை இந்தியாவுக்கு வராது..!!

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ளார் இந்த போராட்டத்திற்கு ஐநா மன்றம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் 21 நாட்கள் ஊரடங்கு என பிரதமர் மோடி  எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குறியது எனவும் ஐநா மன்றம் அறிவித்துள்ளது . 

UNA council appreciating modi for action against corona

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஐநா மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், கொரோனா எதிர்ப்பில்  இந்தியாவிற்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது சீனாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது .  இந்த வைரஸ் 175க்கும் அதிகமான  நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரிழப்பு ஏற்படுத்தி வருகிறது . இந்நிலையில்  இந்தியாவையும் கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கியுள்ளது . இதுவரை இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டுமென மோடி உத்தரவிட்டுள்ளார்

UNA council appreciating modi for action against corona

இந்தியாவில் இரவு 12 மணி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது .  இத்தாலி ,   பிரான்ஸ் ,  ஜெர்மனி ,  போன்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறியதன் விளைவாக தற்போது அந்த நாடுகளில் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது . இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஆரம்பக் கட்டத்தில் உள்ள நிலையில் , மத்திய மாநில அரசுகள் விழித்துக் கொண்டுள்ளன ,  ஆரம்பத்திலேயே இந்த வைரஸை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என திட்டமிட்டு தற்போது நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவை மோடி அமல் படுத்தி உள்ளார் .  கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ளார் இந்த போராட்டத்திற்கு ஐநா மன்றம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் 21 நாட்கள் ஊரடங்கு என பிரதமர் மோடி  எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குறியது எனவும் ஐநா மன்றம் அறிவித்துள்ளது . 

UNA council appreciating modi for action against corona

கொரோனாவுக்கு  எதிரான இந்தியா எடுத்திருப்பது விரிவான அதே நேரத்தில் வலுவான நடவடிக்கை எனவும் ஐநா மன்றம் வியந்து பாராட்டியுள்ளது .  உலக அளவில் சுமார் 175 க்கு மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில் சுமார் 4 லட்சத்து 22 ஆயிரத்து 900 பேரை இந்த  வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  அதே நேரத்தில் இந்த வைரசுக்கு இதுவரையில் 18 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்த நிலையில்  இந்தியாவின் இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டத்தக்கது என ஐநா மன்றம் தெரிவித்துள்ளது . 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios