Ukraine Russia War:இதுவரை 500 ஏவுகணைகளை வீசி தாக்குதல்..சுக்கு நூறான உக்ரைன்..பரிதவிக்கும் மக்கள்..

Ukraine Russia War: ரஷ்யா மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ள நிலையில், உக்ரைன மீது ரஷ்யா இதுவரை 500 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
 

Ukraine Russia War Live Updates- So far 500 missiles have been fired

நேட்டோ இராணுவ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என ரஷ்ய அதிபர் புடின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்ற நேட்டோ அமைப்பில் தனது அண்டை நாடான உக்ரைன் இணையும் பட்சத்தில்  தங்களது பாதுகாப்புக்கு அச்சறுத்தலாகிவிடும் என்று ரஷ்யா தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டது.மேலும் உக்ரைன் நாட்டின் எல்லைகளில் 1.5 லட்சம் படைகளை ரஷ்யா குவித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானலும் போர் தொடுக்கலாம் எனும் சூழலே நிலவி வந்தது.

Ukraine Russia War Live Updates- So far 500 missiles have been fired

இந்நிலையில் தான் உக்ரைனில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா இராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக விமானபடை தளம், இராணுவ தளம், துறைமுக நகரம் உள்ளிட்டவை கைப்பற்றி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள், குடியிருப்புகள் , மருத்துவமனைகள் உள்ளிட்டவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்களான கார்கீவ், கீவ், கெர்சன் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளது ரஷ்ய படை. இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து தான் வருகிறது. 

Ukraine Russia War Live Updates- So far 500 missiles have been fired

உக்ரைனின் ஜாபோரிசியா நகரில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தை, குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேநேரம்தரைவழியாக நுழைந்து ஜாபோரிசியா அணு மின் நிலை யத்தை கைப்பற்றி உள்ளது  ரஷ்ய ராணுவம் . இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் செர்னிஹிவ் நகர் மீது ரஷ்ய போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 47 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், ரஷ்ய விமானங்கள் நடத்தும் வான் வழித் தாக்குதலை நிறுத்த உக்ரைன் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் நேட்டோவிடம் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

அதே வேளை, நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் விமானப் பாதுகாப்புக் காரணமாக உக்ரைன் வான்வழியில் பறக்க வேண்டாம் எனத் தடை விதித்துள்ளது.நேட்டோவின் இந்த அறிவிப்பு உக்ரைன் மீது ரஷ்யா நேரடியாக ஆக்கிரமிப்பைத் தொடர அனுமதிக்கும் செயலாகவே இருக்கிறது என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டியுள்ளார்.

Ukraine Russia War Live Updates- So far 500 missiles have been fired

இந்நிலையில், கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையிலும், உக்ரைனில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறும் வகையில் தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 500 ஏவுகணைகள் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இருவேறு விதமான ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 ஏவுகணைகள் வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இதே நிலை நீடித்தால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று நேட்டோ தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: Russia-Ukraine War: உக்ரைன் மீதான தாக்குதல் திடீரென நிறுத்தம்.. என் தெரியுமா? காரணத்தை சொன்ன ரஷ்யா..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios