Russia-Ukraine War: உக்ரைன் மீதான தாக்குதல் திடீரென நிறுத்தம்.. என் தெரியுமா? காரணத்தை சொன்ன ரஷ்யா..!
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுக்க அந்நாட்டு அதிபர் புடின் உத்தரவிட்டார். இதனையடுத்து, குண்டு மழை, ஏவுகணை தாக்குதல் ரஷ்ய நடத்தி வந்தது. இதில், ரஷ்ய முக்கிய தலைநகரங்கள் மற்றும் அணுமின் நிலையங்களை கைப்பற்றியது.
உக்ரைன் மீது 9 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில் மக்கள் வெளியேற வசதியாக தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுக்க அந்நாட்டு அதிபர் புடின் உத்தரவிட்டார். இதனையடுத்து, குண்டு மழை, ஏவுகணை தாக்குதல் ரஷ்ய நடத்தி வந்தது. இதில், ரஷ்ய முக்கிய தலைநகரங்கள் மற்றும் அணுமின் நிலையங்களை கைப்பற்றியது.
ஆனால், உலக நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்பட்டது. ஆனால், எதற்கு அஞ்சாமல் என தாக்குதலை ரஷ்ய தொடர்ந்து வந்தது. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் பொதுமக்கள், ராணவ வீரர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதை ரஷ்ய அரசு உறுதி செய்தது.
இந்நிலையில், கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையிலும், உக்ரைனில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறும் வகையில் தற்காலிக மாக போர் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.