இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி : தீபங்களை ஏற்றிய ரிஷி சுனக், அக்‌ஷதா மூர்த்தி..!

இங்கிலாந்தின் 10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடத்தினார்.

UK Pm Rishi Sunak and Akshata Murty hosts special Diwali event in 10 Downing street england Rya

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் இங்கிலாந்து மட்டுமினிறி உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். 10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி, இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகம் இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “இன்றிரவு பிரதமர் ரிஷி சுனக் தீபாவளிக்கு முன்னதாக இந்து சமூகத்தைச் சேர்ந்த விருந்தினர்களை வரவேற்றார். இது இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியின் கொண்டாட்டமாகும்.

 

இந்த வார இறுதியில் கொண்டாடும் இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் சுப தீபாவளி வாழ்த்துகள் !” என்று தெரிவித்துள்ளது. மேலும் ரிஷி சுனக் மற்றும் அக்‌ஷதா மூர்த்தி அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாரம்பரிய தீபங்களை ஏற்றி வைக்கும் படங்களும் பகிரப்பட்டுள்ளது..

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இந்து மதத்தை கடைபித்து வருகிறார். G20 உச்சி மாநாட்டிற்காக சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது, புதுதில்லியில் உள்ள புகழ்பெற்ற அக்ஷர்தாம் கோவிலில் ரிஷி சுனக் - அக்‌ஷதா தம்பதியினர் பிரார்த்தனை செய்தனர். அப்போது பேசிய அ "நான் ஒரு பெருமைமிக்க இந்து. நான் அப்படித்தான் வளர்க்கப்பட்டேன், அப்படித்தான் இருக்கிறேன்.” என்று கூறியிருந்தார்.

தீபாவளி வந்தாச்சு.. நவம்பர் 9 முதல் 14 வரை.. அதிக கூட்டம் இருக்கும் - சிங்கப்பூர் ICA வெளியிட்ட முக்கிய தகவல்!

தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் வசிக்கும் இந்துக்களால் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios