இங்கிலாந்து அரசின் புதிய விசா விதிமுறையால் இந்தியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஏராளமாகப் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து பிரிந்தபின், அந்நாட்டுக்கு வந்து புதிதாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், ஏற்கனவே இருக்கம் வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த விசா வழங்கும் முறையில் புதிய மாற்றங்களை அந்நாட்டு அரசு செய்துள்ளது.
இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் இந்த புதிய அறிவிப்பை வியாழக்கிழமை மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, இனிஇம்மாதம் 24-ந்தேதிக்கு பின், இங்கிலாந்து தூதரகத்தில் விசாவுக்காக விண்ணப்பம் செய்யம் ஒரு சாப்ட்வேர் பணியாளர் அதாவது,ஐ.சி.டி விதிமுறையின் படி இதற்கு முன் ஆண்டுக்கு 20,800 பவுண்ட்(ரூ.18 லட்சம் )ஊதியம் பெற்று இருத்தலே விசா பெற போதுமானதாகும்.
இந்த புதிய விதிமுறையின் படி, ஊதிய வரம்பு 30 ஆயிரம் பவுண்ட்(ரூ.25லட்சம்) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆக இனி எந்த ஒரு ஊழியரையும் எளிதாக இங்கிலாந்துக்கு நிறுறனங்கள் பணிமாற்றம் செய்யமுடியாது. இந்தியர்கள் பணிமாற்றம் காரணமாகவோ அல்லது, படித்துக்கொண்டே வேலைபார்க்கும்முறையில், திட்டத்தில் இங்கிலாந்து செல்வதும்கடினமாகும்.
ஐ.சி.டி. என்பது, இந்தியாவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனம் தனது வெளிநாட்டு கிளைக்கு இங்கு பணிபுரியும் ஒரு ஊழியரை தற்காலிகமாக பணியாற்றச் சொல்வதாகும்.
இந்த ஐ.சி.டி. முறை வழியாகவே ஏராளமாந சாப்ட்வேர் பணியாளர்கள் இங்கிலாந்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்பதை அந்நாட்டு குடியேற்ற ஆலோசனை க்குழு கண்டுபிடித்துள்ளது. இந்த முறையைப் பின்பற்றி தற்போது இங்கிலாந்தில் வசிப்பவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதலால் இந்த ஐ.சி.டி. முறையில் கொண்டு வரப்படும் மாற்றம், இந்திய சாப்ட்வேர் பணியாளர்களை கடுமையாகப் பாதிக்கும். இங்கிலாந்தின் புதிய பிரதமர் தெரசா மே ஞாயிற்றுக்கிழமை 3 நாள் பயணமாக இந்தியா வரும் நிலையில், இந்த விசா முறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
