Asianet News TamilAsianet News Tamil

Baby Aya: துருக்கியில் நிலநடுக்கத்தில் அதிசயக் குழந்தை அயா! பல நாட்டினர் தத்தெடுக்க ஆர்வம்!

துருக்கி நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தையை தத்தெடுக்க உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

Turkey-Syria earthquake: Thousands offer to adopt baby pulled from the rubble
Author
First Published Feb 11, 2023, 1:02 PM IST

துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம்  குழந்தை அயாவை தத்தெடுக்க பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் முன்வந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 24 ஆயிரம் பேருக்கு இந்த நிலநடுக்கத்துக்குப் பலியாகியுள்ளனர். மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இன்னும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

துருக்கியில் இந்த நிலநடுக்கத்தின்போது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்குப் பின் உயிரிழந்தார். அவருக்குப் பிறந்த குழந்தை தொப்புள்கொடிகூட அறுபடாத நிலையில் மீட்கப்பட்டது.

பெற்றோரும் உடன்பிறந்தோரும் நிலநடுக்கத்தில் பலியானதால்  அந்தக் குழந்தையின் ஆதரவற்ற நிலையை அடைந்துள்ளது.

துருக்கியில் 8 வயது குழந்தையை மீட்ட இந்திய ராணுவம்; வைரல் வீடியோ!!

Turkey-Syria earthquake: Thousands offer to adopt baby pulled from the rubble

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தக் குழந்தைக்கு அயா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அயா என்றால் அரபியில் அதிசயம் என்று அர்த்தம். இந்தக் குழுந்தையைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில், பலரும் அந்தக் குழந்தையைத் தத்தெடுக்க முன்வந்துள்ளனர்.

ஆனால், இப்போதைக்கு குழந்தையை யாருக்கும் தத்து கொடுக்கப் போவதில்லை என்று குழந்தைக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனையின் மேலாளர் டாக்டர் காலித் அட்டாயா தெரிவித்துள்ளார்.

குழந்தையின் உறவினர் யாராவது திரும்பி வரும்வரை இந்த குழந்தையை தானே சொந்தக் குழந்தையாக பாவித்து வளர்க்கப்போவதாகவும் டாக்டர் காலித் கூறியுள்ளார். 5 மாதங்களுக்கு முன்புதான் அவரது மனைவிக்குக் குழந்தை பிறந்தது. டாக்டரின் மனைவி தன் குழந்தையுடன் அயாவுக்கும் தாய்ப்பால் அளித்து பேணி வருகிறார்.

World War II: திடீரென வெடித்த இரண்டாம் உலகப்போர் குண்டு! செயலிழக்க வைக்கும் முயற்சி தோல்வி!

Follow Us:
Download App:
  • android
  • ios