World War II: திடீரென வெடித்த இரண்டாம் உலகப்போர் குண்டு! செயலிழக்க வைக்கும் முயற்சி தோல்வி!
இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிக்குண்டு லண்டன் அருகே உள்ள நார்போக் நகரில் திடீரென வெடித்துச் சிதறியது.
இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்டதாகக் கண்டெடுக்கப்பட்ட வெடிக்குண்டு லண்டனில் திடீரென வெடித்துச் சிதறிவிட்டது.
1939 முதல் 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி ராணுவம் பிரிட்டன் மீது குண்டுகள் வீசியது. அப்போது வீசப்பட்ட குண்டுகள் பல இப்போது வரை வெடிக்காமல் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கின்றன. அவை கண்டெடுக்கப்படும்போது பாதுகாப்பாக செயல் இழக்க வைக்கப்படும்.
இந்நிலையில், பிரிட்டனின் லண்டன் நகரில் இருந்து சுமார் 90 மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள நார்போக் நகரத்தில் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு அகழ்ந்து எடுக்கப்பட்டது. பல ஆண்டுகள் ஆனாலும் அந்த குண்டு வெடிக்கும் ஆபத்து கொண்டாதாக இருந்தது.
இதனால் அந்த வெடிகுண்டை ரோபோக்கள் மூலம் செயலிழக்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், செயலிழக்க வைப்பதற்கு முன்பே அந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறிவிட்டது.
ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்ட குண்டு குண்டுவெடிப்பு காட்சியை நார்போக் நகர காவல்துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பால் யாரும் காயம் அடையவில்லை என்றும் உறுதிபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு படை கூறுகையில், “வெடிகுண்டை செயல் இழக்க வைக்கும் பணி மெதுவாக நடைபெற்றுவந்தபோது திடீரென குண்டு வெடித்து சிதறியது” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
"வெடிகுண்டை பாதுகாப்பாக செயலிழக்க வைக்கவே முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், எப்போதும் எதிர்பாராத வகையில் குண்டு வெடிக்கும் அபாயமும் உள்ளது. ஆற்றுப்படுகையில் வைத்து குண்டு வெடித்துள்ளால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடும் பண்ணி நடைபெற்று வருகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் 8 வயது குழந்தையை மீட்ட இந்திய ராணுவம்; வைரல் வீடியோ!!