விரட்டி விரட்டி வேட்டையாடும் டிரம்ப்... டொனால்ட் டிரம்ப்...!! அபாய கட்டத்தை நெருங்கும் சர்வதேச நாடுகள்...
ஈரான் மீது கடுமை யான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளிடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பொருளாதாரப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரான் மீது கடுமை யான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளிடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பொருளாதாரப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானத்தை ஈரான் சல்லி சல்லியாக சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து, அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றார். இந்த சூழலில், ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது என்ற அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஈரான் மீது மேலும் கடுமையான பொருளா தாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. இவை, இன்று முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார். முன்னதாக, செய்தியாளர்க ளிடம் இது தொடர்பாக பேசிய அவர், நாம் மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் நாம் விரைந்து செயல்பட வேண்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவுக்கு எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை. அவர்கள் வளமான நாடாக இருக்க விரும்பினால் அதற்கு தடையில்லை. அதே நேரத்தில் அணுஆயுத பலத்தைக் காட்டுவோம் என்று ஈரான் ஆணவப்போக்கில் செயல்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா ராணுவ ரீதியாக இப்போதைக்கு நடவடிக்கை எடுக்காது என்பது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் ஈரான் மீது அமெரிக்கா விதிக்கும் இந்த பொருளாதாரத் தடைகள் உலக நாடுகளில் பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனது தெரிகிறது.
முக்கியமாக ஈரானுடன் வர்த்தக ரீதியாக தொடர்பு வைத்துள்ள நாடுகளுக்கு பெரும் பாதிப்பை சந்திக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே உள்ள தடைகளால் ஈரானால் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருள்களை இறக்குமதி செய்ய முடியவில்லை.
இதனால் அங்கு இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது டிரம்ப் அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகள் ஈரானுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஈரான் அணுஆயுதத் திட்டங்களை முடக்கும் வகையில் அந்நாட்டின் மீது சைபர் தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தத் தாக்குதல் மூலம் ஈரான் அணுஆயுதத் திட்டத்துக்கு பயன்படுத்தும் கணினிகளை அமெரிக்க ராணுவ இணையதள வல்லுநர்கள் முடக்குவார்கள். இதனால், அந்நாடு தொடர்ந்து அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.