அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வெற்றி கோட்டையை நெருங்குகிறார்.

அமெரிக்காவில் கடந்த 575 நாட்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்ட் டிரம்புக்கு எதிரான கருத்துக்களே பரவி வந்துள்ளன.

அமெரிக்க எல்லைகளை சுற்றி சுவர்களை எழுப்புவது, தகுதியற்ற வெளிநாட்டினர்களை திருப்பி அனுப்புவது, சிறுப்பான்மையினத்திவரிடம் எதிர்ப்பு, பாலியல் வழக்குகள் என பல்வேறு சர்ச்சைகளில் டொனால்ட் டிரம்ப் சிக்கினார்.

மேலும், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனக்கு 70 சதவிகித வெற்றி வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.

இந்நிலையில், இன்று காலை முதல் வெளியான முடிவுகளில் டொனால்ட் டிரம்ப் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் முறியடித்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சற்று முன்னர் வெளியான தகவலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 244 இடங்களில் முன்னிலையிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 215 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

இதையொட்டி அமெரிக்க வெள்ளை மாளிகையில், கொடியேற்றும் நிலையில் டொனால்ட் டிரம்ப் நெருங்கி வருகிறார்.