Trump and Modi reaffirm Indian US relations

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் அவருக்கு அதிபர் டிரம்ப் வௌ்ளை மாளிகையில் சிறப்பான விருந்து அளித்து கவுரவித்தார். அப்போது அமெரிக்காவில் நான் இருப்பது என் தாய் நாட்டில் இருப்பது போன்று இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

வௌ்ளை மாளிகையில் விருந்து

அமெரிக்காவுக்கு 2 நாள் அரசுமுறைப்பயணமாக பிரதமர் மோடி சென்று இருந்தார். இதில் அதிபர் டொனால்ட் டிரம்பை நேற்று சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இந்த பேச்சுக்கு பின், பிரதமர் மோடிக்கு, வௌ்ளை மாளிகையில் மிகச்சிறப்பான விருந்து அளித்தார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபின் வௌ்ளை மாளிகையில் உலகத் தலைவருக்கு அளிக்கும் முதல் விருந்து இதுவாகும். அந்த பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.

13 பேர்

இந்த விருந்தில் அதிபர் டிரம்ப் சார்பில், அவரின் மனைவி மெலேனியா டிம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ், உள்ளிட்ட 13 பேர் பங்கேற்றனர்.

தாய்நாடு போல

நீண்ட மேஜையில் பிரதமர் மோடியின் தரப்பிலும், அதிபர் டிரம்ப் தரப்பிலும் அமர்ந்து விருந்துக்கு தயாரானார்கள். அப்போது மோடி பேசுகையில், “ என்னை இங்கு அழைத்த அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். இங்கு நான் குறைவான நேரமே இருக்கப் போகிறேன், இருந்தாலும், நான் இருக்கும் நேரம் எனக்கு என் தாய்நாடு போல உணர்கிறேன்.

125 மக்களுக்கு மரியாதை

 மெலேனியா டிரம்புடனான சந்திப்பு உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பான வரவேற்பை எனக்காக அளித்துள்ளார். இந்த மரியாதை எனக்கு மட்டுமானது அல்ல, 125 கோடி மக்களுக்கானது. அதனால் மீண்டும் நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்றார்.

மது விருந்து

அப்போது, தலையிட்ட அதிபர் டிரம்ப், இன்னும் சிறிது நேரத்தில் நாங்கள் “ ஒரு சியாஸ்’’ அடிக்கப் போகிறோம் என்பதால், ஊடகங்கள் சிறிது நேரம் வௌியே காத்திருக்க வேண்டியது இருக்கும் எனக் கூறியதும் அனைவரும் சிரித்தனர்.

எப்போதும் வரலாம்

“ வௌ்ளை மாளிக்கைக்கு வந்த பிரதமர் மோடி, அவரின் பிரதிநிதிகள் அனைவரும் வந்தது எனக்கு பெருமை அளிக்கிறது. இதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்த சந்திப்பு மிகச்சிறப்பாக இருந்தது, இந்த நாள் போல் அடுத்து ஒரு சிறப்பான நாள் இல்லை. எப்போது விருப்பப்பட்டாலும், மோடி இங்கு வரலாம்’’ என டிரம்ப் தெரிவித்தார்.

சுற்றிக்காண்பித்தார்

பிரதமர் மோடி அதிபர் டிரம்புடன் சில மணிநேரங்களே இருந்தார். இருந்தாலும், இருவரும் மிகவும் நெருக்கமாக பேசி, நட்பாகப் பழகினர். வௌ்ளை மாளிகையில் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் படுக்கை அறையை பிரதமர் மோடிக்கு டிரம்ப் சுற்றிக்காட்டினார். லிங்கனின் எழுதிய கடிதங்கள், அவர் பயன்படுத்திய மேஜை ஆகியவற்றையும் மோடிக்கு டிரம்ப் காண்பித்தார். இருவரும் சுற்றிப்பார்த்துவிட்டு வரும் வரை இரு நாட்டு அதிகாரிகளும் பேசிக்கொண்டு இருந்தனர்.

நன்றி

அமெரிக்காவை விட்டு புறப்படும் முன், மெலேனியா டிரம்பிடம் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, மிகவும் சிறப்பாக உபசரித்ததை நினைவு கூர்ந்து நன்றி கூறினார்.