எகிப்தில் மின்சார ரயில் ஒன்று பிளாட்பார்ம் தடுப்பில் மோதிய விபத்தில் திடீரென தீப்பற்றியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். இதை அந்நாட்டு ஊடகங்களும் உறுதி செய்துள்ளன.

எகிப்து தலைநகரான கெய்ரோ ரயில் நிலையத்தில் காலை மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பிளாட்பார்மில் உள்ள தடுப்பில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ரயிலில் திடீரென தீ பற்றியது. இந்த தீ மளமளவென பக்கத்து பெட்டிகளிலும் தீ பரவியது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 40-க்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.