பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்கு அருகே உள்ள ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 19 உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகருக்கு அருகே உள்ள ரயில் நிலைய தண்டவளாத்தில் ரயில் ஒன்று நின்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக மற்றொரு ரயில் முன்னாள் இருந்த ரயிலின் பின்பக்கத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இரண்டாவது வந்த ரயிலின் டிரைவர், ரயில் போக்குவரத்து சிக்னலை முறையாக கடைபிடிக்காத காரணத்தினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர், சயீத் ரபீக் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
