டோக்கியோ விமான விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய 379 பயணிகள்! மற்றொரு விமானத்தில் சிக்கிய 5 பேர் பலி!

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A350 விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் இருந்த 379 பயணிகள் அதிசயமாக உயிர் தப்பியுள்ளனர்.

Tokyo runway collision: All passengers in Japan Airlines evacuated; 5 crew members found dead on Coast Guard plane sgb

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஹனேடா விமான நிலையத்தில் செவ்வாயன்று இரண்டு விமானங்கள் மோதிய பயங்கர விபத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 379 பேரும் அதிசயமாக உயிர் தப்பியுள்ளனர்.

ஆனால், விபத்தில் சிக்கிய கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 6 பணியாளர்களில் ஐந்து பேர் இறந்துவிட்டனர். விமானத்தின் கேப்டன் மட்டும் தப்பிவிட்டார் என ஜப்பான் கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் டெட்சுவோ சைட்டோவும் இதனை உறுதி செய்துள்ளார்.

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A350 விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. அது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடரோல காவல்படை விமானத்தின் மீதும் மோதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதால் அந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்தது.

ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்.. சேதங்கள் அதிகம்.. ஜப்பான் பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

Tokyo runway collision: All passengers in Japan Airlines evacuated; 5 crew members found dead on Coast Guard plane sgb

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த பயணிகள் பீதியில் விமானத்தில் இருந்து தப்பி ஓடினர். ஆனால், நிறுத்தப்பட்டிருந்த கடலோரக் காவல்படை விமானம் முழுவதும் எரிந்து நாசமானது. அதில் இருந்த 6 பணியாளர்களில் கேப்டன் தவிர மற்ற ஐவரும் பலியானார்கள்.

புத்தாண்டு தினத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் மேற்கு கடற்கரையில் உள்ள நிகாடா விமான நிலையத்திற்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 48 பேர் உயிரிழந்ததாகவும் கடலோர காவல்படை கூறியிருக்கிறது. ஹொக்கைடோவில் உள்ள ஷின்-சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து இந்த விமானம் புறப்பட்டதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்த்துள்ளார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, ஹனேடா விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஹனேடா, ஜப்பானின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். குறிப்பாக புத்தாண்டு விடுமுறை நாட்களில் அதிக போக்குவரத்தைக் காணும் விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios